Thursday, 26 December 2013

இலங்கைத் தரப்பால் தாங்கள் எதிர்நோக்கும் இன்னல்களைக் கண்டித்து தமிழகத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மீனவர்கள் காலவரையற்ற உண்ணாவிரதத்தை மேற்கொண்டுள்ளனர்.
நாகபட்டினம் மற்றும் காரைக்கால் பகுதியைச் சேர்ந்த 64 கிராமத்து மக்களும் அங்குள்ள பஞ்சாயத்து அமைப்புகளும் இணைந்து இந்த வேலை நிறுத்தம் மற்றும் போராட்டத்தை முன்னெடுத்துள்ளதாக போரட்டக் குழுவைச் சேர்ந்த மோகன் தாஸ் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.
இலங்கையின் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ள தமது 70 படகுகள்,மற்றும் சிறையில் இருக்கும் சுமார் 200 மீனவர்கள் விடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெறுகிறது.
புதுக்கோட்டை மற்றும் தஞ்சைப் பகுதி மீனவர்கள் இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
முதல்வருடன் சந்திப்பு

இலங்கையில் நீதிமன்றத்துக்கு செல்லும் தமிழக மீனவர்கள்
தொடர் உண்ணாவிரதத்தில் சுமார் 3000 பேரும், ஆதரவு தெரிவிக்கும் வகையில் 10,000 பேரும் இதில் பங்குபெறுவதாக மோகன் தாஸ் கூறுகிறார்.
இந்தியா-இலங்கை இடையே மீனவர்கள் பிரச்சினையைத் தீர்க்கும் வகையில் நடைபெற்ற பேச்சுவார்தைகள் தீர்வில்லாமல் இழுத்துக் கொண்டே செல்கிறன என்றும், இதற்கு முடிவு காண இந்திய அரசு போதிய முயற்சிகளை எடுக்கவில்லை என்றும் மீனவர்கள் தரப்பு குற்றஞ்சாட்டுகிறது.
இதனிடையே இப்பிரச்சினை குறித்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் குழுவினர் திங்கட்கிழமை(23.12.13) தமிழக முதல்வரை சந்திக்கவுள்ளதாகவும், அதன் பிறகே போராட்டம் குறித்த அடுத்தகட்ட முடிவுகள் எடுக்கப்படும் எனவும் மோகன் தாஸ் தெரிவித்தார்.
இதனிடையே இலங்கை மீன்பிடித்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன, இந்திய அமைச்சர் ஷரத் பவாரை சந்திக்க புதுடில்லி செல்லவுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
தென் துருவத்திற்கு பனிச்சறுக்கிப் பயணம் -லண்டன் இளைஞர் சாதனை
கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 25 டிசம்பர், 2013 - 08:30 ஜிஎம்டி


சாதனை படைத்த லண்டன் இளைஞர் பார்க்கர் லியோடோ
அண்டார்டிக்கா கடற்கரையிலிருந்து தென் துருவத்திற்கு வேகமாகப் பயணித்துச் சென்று புதிய சாதனையை படைத்துள்ளார் லண்டனை சேர்ந்த ஒரு பதின்பருவ இளைஞர்.

தென் துருவத்திற்கு இதுவரை பனிச்சறுக்கி சென்றவர்களில் மிகவும் இளையவர் இவர்தான்.
இந்த சுமார் 500 கிலோமீட்டர் உள்ள தூரத்தை வெறும் 18 நாட்களில் பயணித்து முடித்தார் 19 வயதான பார்க்கர் லியோடோ.

அண்டார்க்டிகா
உறைநிலைக்குக் கீழ் (மைனஸ்) ஐம்பது டிகிரி வெப்பநிலை உள்ள சூழலில், 'டிரான்ஸ்-அண்டார்க்டிக்' மலைத்தொடரை லியோடோவும் அவரது பயண அணியும் 80 கிலோவிற்கும் அதிகமான எடையுள்ள சக்கரமில்லாத பனிச் சறுக்கு வண்டிகளை இழுத்துக் கடந்து சென்றனர்.
காலநிலை மாற்றம் பற்றிய விஞ்ஞான ஆராய்ச்சிக்காக பனி மாதிரிகளையும் அவர்கள் சேகரித்துள்ளனர்.
போலியோவினால் கால்கள் செயலிழந்த போதும் சுயமாக சைக்கிள் திருத்தும் தொழில் புரியும் இளைஞர்

(சிலாபம் திண்ணனூரான்)

சேற்றுக் குளத்­துக்குள் செந்­தா­ம­ரையும் சிப்பியின் உள்ளே முத்தும் பிறப்­பதும் போன்று மாற்­றுத்­தி­ற­னா­ளி­களும் இவ் உல கில் பல சாத­னை­களைப் படைத்­து­வ­­ரு­கின்ற னர். பல மாற்­றுத்­தி­ற­னா­ளி­கள் சோத­னையை வேத­னையை சவா­லாக ஏற்று பல சாத­னைபு­ரிந்­துள்­ளனர். இதற்காக இவர்கள் ஏற்­றுக்­கொண்ட வலிகள் விலை மதிப்­பற்­றவை.

இன்பம் துன்பம் இரண்­டையும் தூக்கி எறிந்து விட்டு ஊக்கம் தள­ராமல் உழைப்­பி­னையே எப்­போதும் கண்ணும் கருத்­துமாய் இருக்கும் ஒரு மாற்­றுத்­தி­ற­னா­ளிதான் கொழும்பு பெர்­குசன் வீதி வெலி­கொ­ட­வத்­தையில் வசிக்கும் எம்.ரி.ரிஸ்வான்.

விதியால் என்னை எதுவுமே செய்ய முடி­யாது. அந்த விதி­யையும் என்னால் வெல்ல இயலும் என்று கூறு­கின்றார். எம­து இக்க­தையின் கதா­நா­யகன் எம். ரிஸ்வான்.



இவர் தனது இரு கால்­க­ளும் போலியோ நோயினால் முடமா­கிய நிலையில் சுய­ம­ரி­யா­தை­யு­டன் சொந்­த­மாக சைக்கிள் திருத்தம் நிலை­யத்தை நடத்தி வரு­கிறார். எழுந்து நிற்க இய­லாத நிலையில் தவழ்ந்து தவழ்ந்­து சிறு குழந்­தை­யாக காணப்­­படும் ரிஸ்வான், தனது சுயதொழில் மூலம் கிடைக்கும் வரு­மானம் தானும் தன்னைப் பெற்ற தாயும் வாழ்க்கை நடத்த போது­மா­ன­தாக உள்­ளதென்ற தக­வலையும் வழங்­கினார்.

ஊன்று கோல் உத­­வி­யோடும் நடை­ப­யில இய­லாத நிலையில் விடா முயற்­சி­யோடு பல­த­ரப்­பட்ட சைக்கிள் வகை­க­ளோடு தினமும் மல்லுக் கட்­டு­கிறார் ரிஸ்­வான். இவரின் விடா முயற்­சியே  இவரை ஒரு திருப்பு முனை வாழ்க்­கைக்கு அழைத்துச் செல்­கின்­றது.

ஏனைய­வர்­களைப் போன்று தனது இய­லா­மையை காட்டி வீதியில் நின்று கையேந்தாமல் தனது சுய முயற்­சியில் வெற்றி நடை­போ­டு­கிறார். இவ­ருக்­கென ஒரு சிறந்த வாடிக்­கை­யாளர் வலை­ய­மைப்பைக் கொண்ட பின்­னணி­யையும் முடக்கி வைத்­தி­ருப்­பது இவரின் தொழில் இரக­சி­ய­மாகும்.

இவ்­வாறு  தனது சுய தொழில் மூல­மாக பெரும் எண்­ணிக்­கையைக் கொண்ட ஒரு வாடிக்­கை­யாளர் வலை­ய­­மைப்பைக் ஏற்­ப­டுத்திக் கொள்ள முக்­கிய கார­ண­மாக விளங்­கு­வது இவ­ரிடம் இருக்கும் நேர்­மை­யே­யாகும்.

தனது வாடிக்­கை­யா­ளரின் சைக்­கிளைத் திருத்­தியப் பின் இவர் கேட்கும் தொகையை விட அதி­க­மா­க வழங்­கினால் அப்­ப­ணத்தை பெற்றுக் கொள்ள ரிஸ்வான் மறுப்புத் தெரி­விப்பார். இது­ இவரின் வெற்­றிக்கும் தனது தொழி­லுக்­கும் வழங்கும் மரி­யா­தையும் கண்­ணி­யமு­மா­கும்.

ரிஸ்­வா­னுக்கு அவ­ரது வாழ்க்­கையில் எதிர் நோக்கும் சவால்­களை நம்­பிக்­கை­யோடும் மன உறு­தி­யோடும் வெற்­றிக்­கொ­­ள்ளும் வல்­ல­மையை எல்­லாம்­வல்ல இறைவன் இவ­ருக்கு பெரும் கொடை­யாக வழங்­கி­யுள்ளார்.

இன்று முப்­பது வயதை தொட்­டு­விட்ட இளை­ஞ­ரான எமது கதா­நா­ய­கன் ரிஸ்வான் இன்றைய காலத்து இளை­ஞர்­க­ளுக்கு முன் மாதி­ரி­யாகத் திகழ்­கிறார். மாற்­றுத்­தி­ற­னா­ளி­யான ரிஸ்­வான், பல்­வே­று சவால்­க­­ளுக்கு மத்தியில் வறுமை­யோ­டும். போரா­டு­கிறார் என்பது எம் அனை­வ­ரையும் வியக்கவைக்கும் செய்­தி­யா­கும்.

தனது இரண்டு கால்­களும் செய­லி­ழந்த நிலையில் சைக்­கிள்­களை திருத்­து­வதில் கை தேர்ந்­தவர் ரிஸ்வான். தன் முழு உழைப்பின் இன்பம் காண்பவர் இவர். ரிஸ்­வானைப் போன்­று உழைப்பின் கூடிய கவனம் மேற் கொள்­வோ­ரே­ வா­ழ்க்­கை­யிலும் முன்­னே­று­ப­வர்கள் என வர்த்தக சமூகம் தெரி­விக்கும் பிர­தான தக­வ­லு­மாகும். இந்த உழைப்பு தான் இவரின் உட­லுக்கும் உள்­ளத்­துக்கும் உறு­தியை வழங்­கும் ­ஊட்­டச் ­சத்­தா­கும்.

அதே உழைப்­பு­தான் ரிஸ்­வானை முன்­னேறு என நச்­ச­ரிக்­கி­றது. அந்த நச்­ச­ரிப்­பா­னது அவரை நல்­ல­வ­ராக ஆக்குவதற்­கா­கத்­தானே தவிர நலியச் செய்­வ­தற்­காக அல்ல. இதன் கார­ண­மாகவே ரிஸ்வானின் மீது எவரும் பல­வீ­ன­மானவராக தங்­களின் பார்­வையைச் செலுத்­து­வ­தில்லை.

சகல உடன் வளங்­க­ளையும் கொண்ட பலசாலி­யா­கவே மக்­களின் பார்வை இவரின் மீது விழு­கின்­றது. இவரால் நிமிர்ந்து நிற்க இய­லாது. நடக்­க­மு­டி­யாது சப்­பா­ணி­யா­கவே வாழ்­கிறார்.

கொழும்பு 15 பேர்­குசன் வீதியில் களனி நதிக்­க­ரை­யோ­ரத்தில் களனி நதி ரஜ மஹா­வி­கா­ரைக்கு அரு­கி­லேயே அவரின் சைக்கிள் திருத்தும் நிலையம் உள்­ளது. இரண்டு சகோதரிகள் மூன்று சகோதரர்களுடன் பிறந்த இவ­ரை இவரின் ஒரு வயதில் போலியோ நோய் தாக்­கி­யுள்­ளது.

தனது 11 வயதில் தந்தையை இழந்­துள்ளார். தகப்­பனின் மறைவை அடுத்து வறுமை சொல்­லாமல் கொள்­ளாமல் இவரின் குடும்­பத்­துக்குள் நுழைந்­து­விட்­டது. ரிஸ்­வா னின் கால்­களும் செய­லிழந்­த­மையால் தாய் இவரை பாட­சா­லையில் கல்­வி­கற்க இணைக்­க­வில்­லையாம்.

இதற்­கா­ன முக்­கிய காரணம் தனது மகன் பாட­சா­லையின் சேர்ந்தான் பாட­சா­லையின் முழு கல்வி சமூ­க­மும் ரிஸ்­வானை கேலி பண்­ணு­வார்கள் என்ற எண்ணமாகும். இந்த தக­வலை ரிஸ்வான் தெரி­விக்­கையில் அவ­ருக்குள் ஒரு வித கவலை அதி­ர­டி­யாக தோன்­றி­யதை அவரின் முகம் அடை­யா­ளப்­ப­டுத்­தி­யது. அப்­போத அந்த முகத்தை சோகம் ஈர­மாக்­கி­யது.

ஆயி­ரந்தான் இருந்­தாலும் அன்­னையின் அன்பே உலகில் மிகச் சிறந்த அன்பு. அந்த அன்பு இயற்­கை­யா­னது. செயற்­கை­யெல்லாம் ஒரு நாள் சித­றக்­கூ­டி­யது. தாயின் அன்பு ஒரு சொர்க்கம் என்­ப­தற்கு உதா­ரணம் தான் ரிஸ்­வா­னின் தாய்.

தாய் மொழியில் எழுத வாசிக்கத் தெரி­யாத ரிஸ்­வா­னுக்கு ஆங்­கி­லத்தில் தனது பெயரை கையெ­ழுத்­தாக பதிவு செய்ய மட்­டுமே தெரி­யுமாம். அதுவும் தனது நண்பர் ஒருவர் மூலமே கையெ­ழுத்­திடும் முறைமையை ஆங்­கி­ல­த்தில் பயின்றுள்ளார்.

இவரின் தகப்­பனின் மறைவின் பின்னர் வீட்­டோடு முடங்கிக் கொள்­ளாது தனது 11 வயதில் மட்­டக்­கு­ளி­யில் தேயிலை ஏற்­று­மதி கம்­பனி ஒன்றில் தொழி­லா­ளியாக இணைந்­துள்ளார்.

சிறுவர் தொழி­லா­ளி­யாக இணைந்த இவ­ருக்கு இத்­தொ­ழிற்­சா­லையில் தேயிலை பொதி­யிடும் தொழில் வழங்­கப்­பட்­டுள்ளது 1994 ஆம் ஆண்டு முதல் 1997 ஆம் ஆண்டு வரை இங்கு தொழில் புரிந்­துள்ளார்

1997 ஆம் ஆண்டு அக்­கம்­ப­னி­யி­லி­ருந்து விலகி சுய தொழிலில் ஈடுப்­பட எண்­ணினார். ஆனால் சுய தொழி­லுக்­கான வாய்ப்பு  இல்­லாது இருந்­தது. இதற்­கான காரணம் மனதில் உறுதி இருந்தும் இவ­ரிடம் பணம் இல்லை மட்­டக்­கு­ளியில் உள்ள தனது நண்பர் அப்துல் ஹம்­திடம் ரிஸ்வான் தனது கனவை கூறி­யுள்ளார்.



அவரோ, இவரை ஊக்­கப்­ப­டுத்தி 300 ரூபா பணம் வழங்­கி­யுள்ளார். அப்­பணமே இவரின் முழு­வாழ்க்­கை­யையும் புரட்­டிப்­போட்­டது.

நேரத்தை வீணாக்­கு­கி­ற­வர்கள் வீணர்கள். இவர்­களே வாழ்க்­கையை வீணாக்­கு­கி­றார் கள். இவர்­களால் என்­றுமே வாழ்க்­கையில் முன்­னுக்கு வர இய­லாது. இவர்களுக்கு நேரத்­தையும் சரி­யா­கப்­ பயன்படுத்­திக்­கொள்ள தெரி­யாது. இவர்­கள் வீதியில் கிடக்கும் குப்பைக் காதி­தங்­களைப் போன்­ற­வர்கள்.

இவ்­வா­றான இளை­ஞர்­க­ளே இன்று போதை­வஸ்த்து பாவ­னைக்கு அடி­மை­யாகி வாழ்க்­கையை சீர­ழித்துக் கொள்­கின்­றனர்.

இந்­நி­லை­யில்தான் எமது கதா­நா­யகன் 300 ரூபாய் பணத்தில் ரிஸ்வான் கற்­பூர உருண்­டை­களை கொள் முதல் செய்தார். கொள்­­முதல் செய்த கற்­பூ­ர உருண்­டை­களை ஆறு உருண்­டைகள் கொண்ட பக்­­கெ­ற்­றுக்­க­ளாக தயா­ரித்தார்.

 தான் தயா­ரித்த கற்­பூர உருண்டை பக்­கெற்­றுக்­களை சந்­தைப்­ப­டுத்த மக்கள் அதி­க­மாக நட­மாடும் கொழும்பு மெயின் வீதி டைட்டஸ் கட்­டிட நடைப்­பா­தையை பயன்படுத்­தினார்.

இவரின் சுய தொழில் வெற்றிப் பய­ணத்­திற்கு இறை­வனின் ஆசிர்­வா­தமும் கிடைத்­தது. தினமும் 250 ரூபாய் முதல் 350 ரூபாய் வரை சம்­பா­திக்கத் தொடங்­கினார்.

சிறி­து காலத்தில் நடை பாதை வியா­பாரம் தடை செய்­யப்­பட்­டதால் ரிஸ்வான் பெரும் பாதிப்­புக்­கு தள்­ளப்­பட்டார்.

இதேவேளை ரிஸ்வான் தனது பழு­தான சக்­கர நாற்­கா­லியை தானே திருத்திக் கொள்வார். சைக்கிள் திருத்தும் தொழிலை ஆரம்­பித்தால் எம்மால் முடி­யு­மே என்ற கனவு அவ­ரது மனதில் தோன்­றி­யது.

இதை மனதில் நிறுத்திக் கொண்டு தனது சகோ­த­ரரின் சைக்கிள் திருத்­தும் நிலை­யத்தில் இணைந்து அதன் தொழில் நுட்­பங்­களை தெரிந்துக் கொண்டார்.



பல வரு­டங்கள் தான் பெற்ற அனு­ப­வத்தைக் கொண்டு 2013 ஆம் ஆண்டு மே மாதம் பெர்­குசன் வீதியில் சைக்கிள் திரு­த்தும் நிலை­யத்தை ஆரம்­பித்தார். இன்று 300 ரூபா­ய் முதல் 400ரூபாய் வரை தினமும் உழைப்­ப­தாக இவர் தெரி­வித்தார்.

“எனது இத்­தொ­ழிலை மேலும் அபி­வி­ருத்தி செய்ய வேண்டும். மேலும் மூவ­ருக்­கா­வது தொழில் வழங்க வேண்டும். எனது உழைப்பில் எனக்கு நிறை­யவே நம்­பிக்கை உண்டு” என்­­கிறார் ரிஸ்வான்.

நாம் இறந்ததன் பின்னர் வேறு ஒரு­வரின் குழி­யிலேயே எம்மை அடக்கம் செய்வர். இது விதி­யா? அல்­லது சதியா? என்­பது இறை­வ­னுக்­குத்தான் தெரியும். ஆனால் இன்று எமது ரிஸ்வான், இறந்த ஒரு மாற்­றுத்­தி­ற­னாளி பாவித்த சக்­கர நாற்­கா­லியையே பாவிக்­கின்றார்.

அதுவும் பாவ­னைக்­கு­த­வாத நிலை சக்­கர நாட்­கா­லி­யாகும். வறுமைக் கோட்டில் வாழும் ரிஸ்­வா­னுக்கு சக்­கர நாற்­காலி ஒன்று அவ­சி­யத்­தே­வை­யாக உள்­ளது.

மனித நேயம் கொண்­ட­வர்கள் இவ­ருக்கு உதவ முன் வரு­மாறு தெரி­விக்­கறார். நல்­லதோர் சக்­கர நாற்­காலி கிடைத்தால் தன்னால் மேலும் உழைக்­க­மு­டியும் என­வும் தெரி­விக்­கின்றார்.

உண்­மை­யி­லேயே என்­றா­வது ஒரு நாள் வாழ்­நாளில் ஒரு தட­வை­யா­வது நம்மை விட கீழே உள்­ள­வர்­க­ளுடன் நம்மை ஒப்­பிட்டுப் பார்க்க வேண்டும். அப்­போது எம்­மையே அறி­யாது எமது மனம் குறு­கு­றுக்­கும் என்ற உண்­மை­யையும் அவர் தெரி­வித்தார்.

உண்மை நேர்மை பலனை எதிர் பார்க்­காமல் கட­மையைச் சரி­யாகச் செய்தல் பிற­ருக்கு துன்பம் அளிக்­கா­ம­லி­ருத்தல் ஆகி­ய நான்கு குணங்­களும் ரிஸ்­வா­னுடன் வாழ்­கின்­றது.

முன்னாள் காதலியை பழிவாங்க பயன்படும் பாலியல் படங்கள்
கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 25 டிசம்பர், 2013 - 17:09 ஜிஎம்டி

 ஹாலி டுரூப்
ஹாலி டுரூப்
பழிவாங்கும் நோக்கில் தமது முன்னாள் பெண் நண்பர்களின் நிர்வாணப் படங்களை இணையத்தில் பதிவேற்றும் வழக்கம் அமெரிக்காவிலும் வேறு பல நாடுகளிலும் அதிகரித்து வருகிறது.
இதனால் பாதிக்கப்பட்ட அமெரிக்கப் பெண்கள் சட்டரீதியான நடவடிக்கைகளை எடுக்க முயன்றுகொண்டிருக்கின்றனர்.
தொடர்புடைய விடயங்கள்
ஹாலி டுரூப்துஷ்பிரயோகம்
அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் ஹாலி டுரூப் வீட்டுக்குச் செல்லும் வழியில் உள்ள படிக்கட்டுகளை ஒட்டி பிரபல ஹாலிவுட் நடிகை மெர்லின் மன்ரோவின் புகைப்படங்கள் பல ஒட்டப்பட்டுள்ளன. 33 வயதான ஹாலி டுரூப் தான் கொண்டாடும் மேர்லின் மன்ரோவைப் போலவே எடுப்பாக, பார்க்க அழகாக இருக்கிறார். அதே நேரம் டெக்சாஸ் பெண்களிடம் இருக்கும் ஒரு வித இயல்பான யதார்த்தம் இவரிடம் காணப்படுகிறது.
கடந்த ஆண்டு இவரது நண்பர் தொலைபேசியில் அழைத்து ''டெஸ்சன் இணைய தளத்தில் பல பெண்களின் நிர்வாணப் படம் இருக்கிறது அதில் உனது படமும் இருக்கிறது'' என்று இவரிடம் தெரிவித்தார்.
 பாலியல் இணையதளங்கள் சில நாடுகளில் சட்டத்துக்கு உட்பட்டு இயங்குகின்றனர்
பாலியல் இணையதளங்கள் சில நாடுகளில் சட்டத்துக்கு உட்பட்டு இயங்குகின்றனர்
மூன்று எக்ஸ்களைக் கொண்ட டெக்ஸன். டாட். காம் என்ற இணைய தளத்துக்கு சென்று பார்த்த போது ஹாலி டுரூப் 24 வயது இருக்கும்போது அவர் தனது முன்னாள் ஆண் நண்பருக்காக மேலாடையின்றி எடுத்துக் கொண்ட படங்கள் அதில் இருந்தன. படங்களுடன் அவரது பெயர், முகநூல் முகவரி, அவர் இருக்கும் இடத்தை குறிக்கும் கூகுள் மேப் போன்றவையும் இணையத்தில் கொடுக்கப்பட்டிருந்தன.
இதன் பிறகு அறிமுகமில்லாத நபர்கள்கூட தன்னை தொடர்பு கொள்ள முயன்றதாக ஹாலி பிபிசியிடம் கூறினார்.
சிலரின் படங்களை அவர்களின் முன்னாள் ஆண் நண்பர்களே இணைய தளத்தில் பதிவேற்றியுள்ளனர். வேறு சிலரின் படங்கள் கம்ப்யூட்டர், தொலைபேசி போன்றவைகளில் இருந்து திருடப்பட்டு இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
டெக்ஸ்சான் டாட் காம் தளத்தால் பாதிக்கப்பட்ட பெண்கள் தற்போது ஒன்று கூடி சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றனர். இந்த ஆண்டின் துவக்கத்தில் 30 பெண்கள் சம்மந்தப்பட்ட இணைய தள உரிமையாளர்கள் மற்றும் அதைச் சார்ந்த கம்பெனி மீது நஷ்டஈடு கோரி வழக்கு தொடுத்தனர். இப்போது அந்த இணையதளம் மூடப்பட்டுவிட்டது. ஆனாலும் பெண்களின் போராட்டம் தொடர்கிறது.
ஒரு இணைய தளத்தை பயன்படுத்துவோர் கொண்டு சேர்க்கும் அதாவது அப்லோட் செய்யும் விடயங்களுக்கு இணைய தள உரிமையாளர்கள் பொதுவாக பொறுப்பாக மாட்டார்கள் என்று அமெரிக்க சட்டங்கள் கூறுகின்றன. இந்த இணைய தள உரிமையாளரும் தான் எவ்வித குற்றத்தையும் செய்யவில்லை என்று நீதிமன்றத்தில் கூறியுள்ளார். அதேநேரம் பாதிக்கப்பட்ட பெண்கள், பழிவாங்கும் நோக்கில் நிர்வாணப்படங்களை இதுபோல வெளியிடுவதை தண்டனைக்குரிய குற்றமாக அறிவிக்க வேண்டும் என்று கோரி ஒரு பிரசாரத்தை முன்னெடுக்கின்றனர்.
யோசனை

பாதிக்கப்பட்ட பல பெண்கள் தொடர்ந்து வலியுறுத்துவதன் காரணமாக, சில உள்ளூர் மக்கள் பிரதிநிதிகள் இந்தக் கவலைகளை முன்எடுத்துச் செல்ல ஆரம்பித்துள்ளனர். பழி வாங்கும் நோக்கில் நிர்வாணப் படங்களை வெளியிடுவது குற்றம் என்று கூறும் சட்ட முன்வரைவு விஸ்கான்சின், நியுயார்க், மேரிலாண்ட், கலிபோர்னியா உள்ளிட்ட இடங்களில் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
இங்கே டெக்சாசில் இந்த விடயம் குறித்து டுவிட்டரிலும், இணையத்தின் பிற இடங்களிலும் காரசார விவாதம் நடந்து வருகிறது. குற்றவியல் சட்ட வழக்கறிஞரும், வலைப் பதிவருமான மார்க் பென்னட், பழிவாங்கும் நோக்கில் இணையத்தில் நிர்வாணப் படங்களை பதிவேற்றுவதை கிரிமினல் குற்றமாக அறிவிக்கக் கூடாது என்ற நிலைப்பாட்டை எடுத்துள்ளார். அறம் சார் தடுமாற்றங்களால்தான் இப்படி ஒரு சட்டம் வேண்டும் என்று சிலர் வாதிடுவதாகவும் அவர் கூறுகிறார்.
பழிவாங்கும் நடவடிக்கைக்கு ஆளாகிவிட்டு, சட்டத்தை நாடுவதை விட வருமுன் காத்துக் கொண்டிருக்க வேண்டியதுதானே என்ற வாதம் இங்கே வைக்கப்படுகிறது. அதாவது அதுபோன்ற நிர்வாணப் படங்களை எடுக்காமல் இருந்திருக்கலாமே என்பதே அந்த யோசனை.
ஆனால் இந்த யோசனையை ஹாலி நிராகரிக்கிறார். “அதுபோல படங்களை எடுக்கும் உரிமை எனக்கு உண்டு. அந்தப் படம் எனக்காகவும் எனது அப்போதைய ஆண் நண்பருக்காகவும் எடுக்கப்பட்டது. உலகம் பார்ப்பதற்காக இல்லை. யாரோ களவாக அந்தப் படத்தை எடுத்து இணையத்தில் போட்டு எனது வாழ்க்கையைப் பாழ்படுத்தி விட்டனர்” என்றார் அவர்
விபத்தின்பின் எச்.ஐ.வி. தொற்றுக்குள்ளான ஒரு வைத்தியரினால் ஆரம்பிக்கப்பட்ட எச்.ஐ.வி. நோயாளிகளைப் பாதுகாப்பதற்கான இலங்கையின் முதல் அமைப்பு
2013-12-01 11:03:33

- சிலாபம் திண்ணனூரான்

எச்.ஐ.வி. தொற்றுக்குள்ளானதால் தீண்டப்படாதவர்கள் என சமூகத்தால் ஒதுக்கப்பட்டவர்களுக்காக அமைக்கப்பட்ட அமைப்பே லங்கா பிளஸ் ஆகும். இந்த அமைப்பை ஸ்தாபித்தவர் இலங்கையின் பிரபல சிறுவர் நல விசேட வைத்தியரான அமரர் டாக்டர் திருமதி காமலிக்கா அபேயரத்ன. சற்றும் எதிர்பாராத விதமாக தானும் எயிட்ஸ் தொற்றுக்குள்ளான நிலையில் இந்த அமைப்பை ஸ்தாபித்தார் டாக்டர் கமாலிக்கா.

ஒருநாள்  இவரின் வாகனம் காலி நகரில் விபத்தில் சிக்கியது. டாக்டர் திருமதி காமலிக்கா அபேயரத்ன பலத்த காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் இருந்த அவ்வேளையில் இவருக்கு இரத்தம் தேவைப்பட்டு இரத்தம் வழங்கப்பட்டது. இவருக்கு பல்வேறு உடல் உபாதைகள் ஏற்பட இரத்தம் பரிசோதிக்கப்பட்டது.



இரத்தப் பரிசோதனையின் மூலம் டாக்டரின் இரத்தத்தில் எச்.ஐ.வி. தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இவரின் கணவரும் பிரபல வைத்தியராவார். இரத்த மாற்றத்தின்போதே இவருக்கு எச்.ஐ.வி. தொற்று நுழைந்துள்ளது. டாக்டரின் உடலில் எச்.ஐ.வி. தொற்று இருப்பது தெரிந்ததும் இவரின் உறவினர்களும் வைத்தியசாலை ஊழியர்கள் முதல் உயர் வைத்தியர்கள்வரை இவரை ஒதுக்கி வைத்தனர். இவர் சமூகத்தில் தனிமைப்படுத்தப்பட்டார்.

இதன் விளைவாக 1997ல் எச்.ஐ.வி. தொற்று நோயாளிகளை பாதுகாப்பதற்காக டாக்டர் திருமதி காமிலிக்கா அபேயரத்னவால் ஆரம்பிக்கப்பட்டதே லங்கா ப்ளஸ் என்ற அமைப்பாகும்.

டாக்டர் திருமதி காமலிக்கா அபேயரத்ன மரணமானதன் பின்னர் இவ்வமைப்பு பலரின் தலைமையில் இயங்கி வந்துள்ளது. தற்போது இவ்வமைப்பின் சிரேஷ்ட உறுப்பினரும், அமைப்பின் ஊடக பேச்சாளருமான சரத் பீரிஸ் இவ்வமைப்பின் சேவைகள் பற்றி  மெட்ரோ நியூஸிற்கு விரிவாக தெரிவித்தார் :

இன்று இவ்வமைப்பில் எச்.ஐ.வி. தொற்று நோயாளிகள் நாடு முழுவதுமாக 280 பேர் உள்ளனர். இளம் வயது சிறுவர்கள் இருபது பேர்வரை உள்ளனர். அரச மருத்துவமனையின் மூலமாக இந்நோயாளிகளுக்கான மருந்து வகைகள் இலவசமாக கிடைக்கின்றன.

நம்பிக்கையற்ற உறவின் மூலமே எச்.ஐ.வி. பரவுகின்றது. எச்.ஐ.வி. தொற்று நோயாளர்கள் என இனம் கண்டப் பின்னர் அவர்களை குடும்பத்தினர வீட்டை விட்டு வெளியேற்றுகையில் அக்குடும்பத்தாரிடம் நோயாளியை ஏற்றுக் கொள்ளும் வகையில் இணக்கப்பாட்டுக்கு கொண்டு வருவோம். இது மிகவும் கஷ்டமான செயலாகும். ஒவ்வொருவரின் மனதையும் பண்படுத்தல் மிகப் பெரிய சவலாகும். நோயாளிகளுக்கு ஆலோசனை வழங்குதல். அவர்களை தைரியப்படுத்தி சுய தொழிலில் ஈடுபட வைத்தல். எச்.ஐ.வி. தொற்று நோயாளிகளை புதிரான உலகுக்குள் நுழைய வைப்பதற்காக அவர்களையே புரிந்துகொள்ள வைத்தல் என பாரிய வேலைத் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம் என்றார்   சரத் பீரிஸ்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், கொழும்பு மாவட்டத்திலேயே அதிகப்படியான எச்.ஐ.வி. தொற்று நோயாளர்கள் உள்ளனர். மலையகப் பகுதிகளிலும் சுமார் ஆறு பேர் வரையில் இனங்காணப்பட்டுள்ளனர். இவ்வாறு இலங்கையின் பல பிரதேசங்களையும் சேர்ந்த ஒன்பது ஆண், பெண் நோயாளிகள் எமது அமைப்பின் கட்டிடத்தில் தங்கி வாழ்கின்றனர். இவர்கள் தங்களின் குடும்பத்தாரால் வெறுக்கப்பட்டவர்கள். இவ்வாறானவர்களுக்கு எமது அமைப்பு புனர்வாழ்வு வழங்குகின்றது எனவும் தெரிவித்தார்.

எச்.ஐ.வி. தொற்று நோயாளிகளின் பாடசாலை செல்லும் பிள்ளைகளுக்கு பாடசாலை கற்றல் உபகரணங்களையும் சப்பாத்து பாடசாலை சீருடை, பேக் வகைகளையும் "@ஹாப்ரோ சேவ் சில்ரன்' அமைப்பின் உதவியோடு வழங்கி வருகின்றோம். அத்தோடு இவ்வமைப்பின் ஊடாக இம்மாணவர்களுக்கு மாதா, மாதம் சிறு நிதி உதவியையும் வழங்குகின்றோம். இந்நிதி உதவி சுகாதாரம், கல்வி, போசாக்கு மேம்பாட்டுக்காகவே வழங்கப்படுகிறது. அத்தோடு சிப்பீஸ் பிரண்ட் அமைப்பின் மூலமாக உலர் உணவு வகைகளும் வழங்கப்படுகின்றன. எங்களின் அமைப்பிடம் பண வசதி இல்லை. பல்வேறு தொண்டு நிறுவனங்களின் ஊடாகவே இவ்வாறான சேவையை முன்னெடுத்துச் செல்கின்றோம். இது மிகவும் கஷ்டமான ஒரு பணியாகும்.

இதற்கு அப்பால் எமது அங்கத்தவர்கள் உடல் நலமில்லாமல் இருக்கும் நிலையில்  பொருத்தமான சிகிச்சை முறைகளையும் தடுப்பு முறைகளையும் பின்பற்ற வேண்டுமென்று அவசியம் வலியுறுத்துவது எங்கள் அமைப்பின் கட்டாய கடமையாகும்.



நோய்வாய்ப்படும்போது நல்ல கவனிப்பினை பெறுங்கள். உங்களின் உடலைச் சுத்தமாக வைத்திருங்கள். பற்களை நன்கு பாதுகாப்பாக வைத்திருங்கள். முறையாக மருந்து வகைகளையும், உணவையும் உண்ணுங்கள். எல்லாவற்றிற்கும் மேலாக நன்கு ஓய்வு பெறுங்கள் என தொற்று நோயாளர்களை அறிவுறுத்துவோம்.

எச்.ஐ.வி. தொற்று நோயாளி என அறிந்ததும் நோயாளியின் குடும்பங்களில் @நர்மையற்ற தன்மை வெளிப்பட ஆரம்பிக்கும்போது எவ்வளவுதான் நாகரீகமான முறையில் செயல்பாடுகள் அமைந்திருந்தாலும் அக்குடும்பம் சுக்கு நூறாக சிதைந்து விடும் என்பது உண்மை. இதை நிவர்த்தி செய்ய பெரும் முயற்சியை "லங்கா ப்ளஸ்' அமைப்பு மேற்கொண்டு வருகின்றது. முழுக் குடும்பமும் உண்மையோடு ஒத்துவாழ கடுமையாக விழிப்புணர்வை சமூகம் மத்தியில் முன்னெடுத்து வருகின்றோம் என்றார்.

அவர் தொடர்ந்து விளக்குகையில்;
தற்போது இலங்கையில் எச்.ஐ.வி. தொற்று நோயாளர்களின் மரணம் மிகவும் குறைவை எட்டிவிட்டது. இந்நோயாளர்களுக்கான அனைத்து மனித உரிமைகளையும் இச்சமூகம் வழங்குதல் அவசியம். இவர்கள் தீண்டப் படாதவர்கள் அல்லர். இவர்களுக்கும் சமூகத்துக்கும் கருத்து முரண்பாடுகள் ஏற்படக்கூடாது. உண்மையிலேயே எச்.ஐ.வி. தொற்று என்பது சுயமரியாதைக் குறைவை காட்டும் ஒரு சின்னம் என எண்ணுவது தவறானதாகும். ஆளுக்கு ஆள் பரப்பிவிடும் தவறான வார்த்தைக@ள சமூகத்தில் தவறான பிரசாரத்தை ஏற்படுத்தி விடுகின்றன. அனைவரும் செழிப்பாகவும் வளமாகவும் இருந்தால் அப்போதுதான் சமூகம் தவறான தகவல்களை ஏற்றுக்கொள்ள மறுக்கும்.

இன்று எச்.ஐ.வி. நோயாளர்களுக்கான மருந்து வகைகளும், பரிசோதனைகளும் நிறைந்து உள்ளன. உதாரணமாக கர்ப்பிணி தாயொருவர் எச்.ஐ.வி. தொற்றாளர் என அவர் தெரிந்து கொண்டால் உடனடியாக அவர் வைத்தியரை நாடி உரிய சிகிச்சைகளை மேற்கொண்டால் கருப்பைக்குள் வாழும் சிசு எச்.ஐ.வி. தொற்றின் தாக்கத்திலிருந்து முற்றாகப் பாதுகாக்கப்படும். குழந்தைக்கு எச்.ஐ.வி. தொற்று நுழைய மருந்தும் விஞ்ஞான சிகிச்சைகள் மூலம் தவிர்த்துக் கொள்ளலாம்.

பாரிய சேவையை எங்கள் அமைப்பின் தலைவி காலஞ்சென்ற டாக்டர் காமலிக்கா அபேயரத்ன அவர் அமரராகும் முன் மேற்கொண்டார். இலங்கையில் எச்.ஐ.வி. தொற்று நோயாளர்களுக்கான அமைப்பே இல்லாதிருந்த வேளையில் இச் சமூகத்தின் முன் எழுந்து துணிந்து செயல்பட்டவர் இவர். இவரின் துணிச்சலான செயலை இன்றும் நாம் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் மேற்கொண்டு வருகின்றோம் என துணிவுடன் தெரிவிக்கிறார் சரத் பீரிஸ் அவர்கள்.

எமது அமைப்பிற்கான செõந்தக் கட்டிடம் இல்லை. வாடகைக்கே கட்டிடத்தை கொண்டுள்@ளாம். எமது வேலைத் திட்டங்களை முன்னெடுத்துச் செல்ல போதிய நிதி இல்லை. தேவையான நிதி இல்லாது திண்டாடுகின்றோம். அரசாங்கம் எமக்காக மருந்து வகைகளை மட்டுமே வழங்கி வருகின்றது. இலங்கை எயிட்ஸ் அமைப்பு எமது அலுவலகத்திற்கான மின்சார கொடுப்பனவுகளை மாதா மாதம் வழங்கி வருகின்றது. மேலும் இலங்கை குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்ட அமைப்பும் மக்கள் தேவ சபையின் போதகர் விஜித்த செனவிரத்ன போன்றோர் உதவிகளை வழங்கி வருகின்றனர்.

எமது அமைப்பு இலங்கையின் சட்டபூர்வமான தொண்டு அமைப்பாகும். பாதுகாப்பு அமைச்சில் அரச சார்பற்ற தொண்டு நிறுவனமாக பதிவாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது. "லங்கா ப்ளஸ்' சேவையை எச்.ஐ.வி. தொற்றாளர்களுக்கு தொடர்ந்து வழங்க காத்திருக்கின்றது. அதற்கான வளம் இல்லாமை பெரிய தடையாகும். தனவந்தர்கள் "லங்கா ப்ளஸி'ற்கு உங்களின் தாயின், தகப்பனின் பெயரில் கொழும்பு மாநகர எல்லைக்குள் மூன்று பேர்ச்சரஸ் காணி ஒன்றை வழங்க முன்வந்தால் அது பெரியதோர் புண்ணியமாக இருக்கும். இங்கு தங்கி  இருப்பவர்களுக்கான உணவுத் தேவைகளை பூர்த்தி செய்யவும் அனுசரணையாளர்களை தேடுகின்றோம். உங்களின் குழந்தைகளின் பிறந்த நாளை எங்களுடன் கொண்டாடுங்கள். எங்களின் தேவைகளை ஒதுக்காதீர்கள். நாங்களும் இச் சமூகத்தின் உறுப்பினர் என்பதை உணருங்கள்.

நம்பிக்கை இல்லாமல் வாழ்கின்றவர்கள் அல்ல நாங்கள் பாவப்பட்ட கூட்டமுமல்ல. எங்கள் மீதும் நம்பிக்கை கொள்ளுங்கள். எங்கள் மீதும் மதிப்பை செலுத்துங்கள் என்கிறார் "லங்கா ப்ளஸ்' அமைப்பின் சிரேஷ்ட உறுப்பினரும், ஊடக பேச்சாளருமான சரத் பீரிஸ். இவருடன் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ள 071 6195573 என்ற கைப்பேசி மூலமாக மேற்கொள்ளலாம். இவ்வமைப்பின் இணையத்தள முகவரி ஃச்ணடுச்ணீடூதண்.ணிணூஞ் ஆகும். இவர்களின் நிறைந்த வாழ்விற்கான வழி தரமான வாழ்க்கை வாழ நீங்களும்ஒரு பொது வழிகாட்டியாக நிமிருங்கள் எனவும்  சரத் பீரிஸ் கூறினார்.

காதலன் மூலம் எச்.ஐ.வி. தொற்றுக்குள்ளான பெண்ணின் கதை
2013-12-20 12:10:46

-சிலாபம் திண்ணனூரான்

எனது பெயர் காஞ்சனா (பெயர் மாற்றப்பட்டுள்ளது)  எனது குடும்பத்தின் வறுமை காரணமாக 2000 ஆம் ஆண்டில் வத்தளையில் தனியார் ஆடைத் தொழிற்சாலையில் வேலைக்குச் சேர்ந்தேன். வத்தளையில் தனியார் விடுதி ஒன்றில் தங்கியே தொழிலுக்குச்  சென்றேன். அவ்விடுதி நான் வேலை செய்த ஆடைத் தொழிற்சாலையில் கட்டுப்பாட்டிலேயே செயற்பட்டது.


அங்கு தொழில் செய்து வருகையில் என்னோடு தொழில் புரிந்து வந்த ஓர் இளைஞனோடு காதல் மலர்ந்தது.  நாளடைவில் இருவரின் காதலும் இரு வீட்டாருக்கும் தெரியவந்தது. இரு வீட்டாரும் நாங்கள் திருமணம்  செய்து கொள்ளவும் சம்மதித்தனர். ஆனால் எனது காதலரான சுனிலின் அண்ணனது திருமணம் முடியும்வரை பொறுத்துக் கொள்ளுமாறு தெரிவித்தனர். இருவரும் பொறுமையைக் கை கொண்டோம்.

2003 ஆம் ஆண்டு சுனிலுக்கு திடீரென கடுமையான சுகவீனம் ஏற்பட்டது. கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அவரைப் பார்த்து சுகம் விசாரிக்க நானும் எனது பெற்றோரும் தேசிய வைத்தியசாலைக்கு சென்று வருவோம். அவரின் பெற்றோரும் வைத்தியசாலைக்கு வருவார்கள். சுமார் இரண்டு மாதங்கள் வைத்தியசாலையில் தங்கி சிகிச்சைப்  பெற்று வந்தார். அவருக்கு என்ன நோய், ஏன் அவதிப்படுகிறார் என்பது எனக்குத் தெரியாமல் இருந்தது.

அவரின் பெற்றோருக்கு சுனிலை தாக்கும் நோய் எதுவென வைத்தியர்கள் கூறியுள்ளனர். ஆனால் சுனிலும் அவரின் பெற்றோரும் எனக்கு திரைப் போட்டு விட்டனர்.


வைத்தியசாலையை விட்டு வெளிவந்ததும் சுனில் மீண்டும் தொழிற்சாலைக்கு வந்தார். மீண்டும் இரண்டு மாதத்தின் பின்னர் தொழிலுக்கு வராது நின்றுவிட்டார். என்னிடமும் சொல்லவில்லை. எனக்கு அவர் வராமைக்கான காரணம் தெரியாது தடுமாறினேன்.


என்னுடன் இருந்த தொடர்பையும் முறித்துக் கொண்டார். அவரின் பெற்றோரிடம் விபரம் கேட்டேன். அவர் நுவரெலியாவில் இருப்பதாக பொய் கூறினார். பின்னர் ஒரு நாள் அவர் கடுமையாக நோய்வாய்ப்பட்டு ஐ.டி.எச். வைத்தியசாலையில் இருப்பதாக அவரின் பெற்றோர் தெரிவித்தனர். அங்கும் சென்று  அவரை பார்த்தேன். அவர் பேசும் சக்தியையும் இழந்து துன்பத்துடன்  காணப்பட்டார். இரண்டு நாட்களின் பின்னர் அவரின் மரணச் செய்தி எனக்கு தகவலாக கிடைத்தது.


இது 2003 ஆம் ஆண்டு நடந்தது. மரண வீட்டுக்கு சென்று  அவரின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டேன். அப்போதும் அவருக்கான நோய் பற்றிய தகவல் எனக்குக் கிடைக்கவில்லை. எனது கனவுகள் நிலத்தில் வீழ்ந்த மண் பானையாக மாறின. சோகத்தை சுமந்தவாறு வத்தளைக்கு வந்துவிட்டேன்.


2004 ஆம் ஆண்டின் மார்ச் மாதம் நானும் சுகவீனம் அடைந்தேன். கடுமையான காய்ச்சல் என்னைத் தொற்றிக் கொண்டது. எனது விடுதி மேற்பார்வையாளரான மெடம் என்னை திடீரென வத்தளையிலுள்ள தனியார் வைத்தியலைக்கு அழைத்துச் சென்றார். அங்கு டாக்டரிடம் மெடம் தனியாக வெகுநேரம் கதைத்தார். பின்னர் என்னை உள்ளே அழைத்தார் டாக்டர். எனது குருதி மாதிரியை பெற்றார். நான் அதிர்ந்துவிட்டேன்.


சில நாட்களின் பின்னர் எனக்குள் எயிட்ஸ் நோய் இருப்பதாக தெரிவித்தனர். என் மீது மெடத்திற்கு சந்தேகம் வரக் காரணம், சுனிலும் மெடமும் ஒரே ஊர். மெடம் சுனிலை எயிட்ஸ் நோய் தாக்கியது என்பதை அவரின் தந்தை  மூலம் இரகசியமாக தெரிந்து கொண்டுள்ளார்.


இதை அறிந்ததும் நான் தற்கொலை செய்துகொள்ள எண்ணினேன். இதன் பின்னர் தொழிற்சாலை முகாமையாளருக்கு விடுதி மெடம் எனது நிலையை தெரிவித்து விட்டார். இப்போது சுனில் மூலம் எனக்கு எயிட்ஸ் அல்ல. எச்.ஐ.வி. வைரஸ் உள்ளதாக டாக்டர் மூலம் தெரிந்து கொண்டேன். முகாமையாளர் எனக்கு தொழில் செய்ய இயலாது எனவும் சுயவிருப்பத்தின் நிமித்தம் விலகுவதாகவும் கடிதம் எழுதி பெற்றுக் கொண்டு என்னை எனது வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.


உண்மையிலேயே மனிதர்களிடம் மன வலிமை கொண்டவர்களால்தான் மற்றவர்கள் மீது அன்பு செலுத்த  முடியும். அவ்வாறான மன வலிமை கொண்டவர்கள் தான் எனது விடுதி மெடமும் தொழிற்சாலை முகாமையாளரும் என்னை எச்.ஐ.வி. தாக்கியதை இவ்விருவரும் எவரிடமும் சொல்லவில்லை. என்னை தைரியப்படுத்தினார்கள். அவர்களும் என்னோடு இணைந்து அழுதார்கள். அப்போது அவர்கள் இருவரும் எனக்கு தெய்வமாக காட்சிக் கொடுத்தார்கள்.


வீட்டுக்கு வந்தன். மூட்டை முடிச்சுக்களுடன் அத்துடன் எச்.ஐ.வி. தொற்றையும் சுமந்தவாறு செத்துப் பிழைத்து பிழைத்து வாழும் நிலையில். எனது அம்மா இறந்துவிட்டார்.


அண்ணனிடம் உன்னை விடுதி மெடம் அழைத்து வரச் சொன்னார்கள்  என்றேன். மறுநாள் ஊரிலிருந்து நானும் அண்ணனும் வத்தளை விடுதிக்குச் சென்றோம். விடுதி மெடம் எங்களை புன்னகையோடு வரவேற்றார். விபரத்தை மெதுவாக அன்போடு அண்ணனிடம் தெரிவித்தார்.
எனது அண்ணன் உடைந்து போனார். மெடம் அண்ணனை தைரியப்படுத்தி உணவும் கொடுத்து எனக்கு பணமும் உடைகளும் கொடுத்து அனுப்பி வைத்தார். 2004  முதல் 2008 வரை ஊரிலேயே வாழ்ந்தேன். கொழும்பு பாலியல் நோய் எயிட்ஸ் தடுப்பு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் பெரும் மன உளைச்சல் என்னை வாட்டியது. எனக்கு வைத்தியர்கள் ஆலோசனை வழங்கினர்.


இந்நிலையில் 2008 ஆம் ஆண்டு என்னை மீண்டும் காய்ச்சல் தாக்கியது. மாகாண அரச மருத்துவமனையொன்றில் அனுமதிக்கப்பட்டேன். அங்கு வார்ட்டில் தங்கி சிகிச்சைப் பெற வார்ட்டில் தங்க வைக்கப்பட்டேன். வார்ட் வைத்தியரிடம் எனக்கு எச்.ஐ.வி. தொற்று இருப்பதாக தெரிவித்தேன். இதனால் இரண்டு நாட்களாக எனக்கு எவ்வித சிகிச்சைகளையும் இவ் வைத்தியசாலையில் வழங்கவில்லை. நல்ல மனிதாபிமானம் கொண்ட வைத்தியர் எனக்கு மருந்துகளை வழங்கி ஆறுதல் கூறினார்.


இது காலம்வரை எனது கிராமத்துக்குத் தெரியாத என் நோய் விடயம் இவ் வைத்தியசாலையில் உள்ள தாதியொருவர் மூலமாக எனது கிராமத்துக்கு தெரியவந்தது. இவர் எனது கிராமத்தில் திருமணம் முடித்துள்ள தகவல் எனக்குத் தெரியாது போனமையே இத்தகவல் பரவக் காரணமாகும்.


பின்னர் கிராமத்தில் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டியேற்பட்டது. சொல்ல இயலாத தொல்லைகள். மக்கள் எனக்கெதிராக வெறுப்பைக் கொட்டினார்கள். மனித வெறுப்பு என்பது பலவீனத்தின் அடையாளம். எச்.ஐ.வி. தொற்றினால் 2008 அக்டோபரில் எனது உடலின் நோய் கிருமியை  எதிர்க்கும் சக்தி 129 ஆக இருந்தது. இதனால் எச்.ஐ.வி. தொற்றை கட்டுப்படுத்த இயலாது தடுமாறினேன். பின்னர் எச்.ஐ.வி. கட்டுப்பாட்டுக்கான உயர் மருந்து வகைகளை பாவித்ததன் பயனாக உயிர்பிழைத்தேன். இதன் பின்னர் எனது உடல் மெலியத் தொடங்கியது. கிராமத்துக்குப்  போக முடியாது தவித்தேன். தொடர்ச்சியாக தங்கி ஐ.டி.எச். வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தேன்.

இவ் வைத்தியசாலையில் வைத்த பொசிட்டியூவ் வுமன் நெட்வேர்க் அமைப்பின் தலைவி பிரின்ஸி மங்கலிக்காவை டாக்டர்கள் எனக்கு அறிமுகப்படுத்தினர். அவர் எனக்கு தைரியத்தை வழங்கினார். என்னை மீண்டும் இச்சமூகத்துடன் வாழும் பயிற்சியை வழங்கினார். இதன் பின்னர் தொடர்ந்து வாழும் ஆசை எனக்குள் மலர்ந்தது. இப்போது எனது உடல் சாதாரண ஒரு இளம் பெண்ணின் நிலைக்கு வளர்ந்து விட்டது. எனது கிராமத்துக்குப் போகின்றேன். சாதாரண பெண்ணைப் போன்றே எனது கிராமத்தில் நடமாடுகிறேன்.

எயிட்ஸ் என்ற பய மாயை என்னை விட்டு தொலைந்துவிட்டது. இன்று எச்.ஐ.வி. பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் கலந்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றேன். இந்நாட்டின் படையினரின் முகாம்களில் இடம்பெறும் நிகழ்வுகளில் இணைந்து இருபதுக்கும் மேற்பட்ட விழிப்புணர்வு உரைகளை அவர்கள் மத்தியில் நிகழ்த்தியுள்ளேன். இப்போது இவ்வாறு எனது சேவையை மக்களுக்கு வழங்கி வருகிறேன் என்றார் காஞ்சனா.

'முப்பது வயதில் வாழ்க்கையை தொலைத்து திருமணம் முடிக்காது உள்ள நீங்கள் இளம் வயதினருக்கு என்ன தகவல்களை வழங்க முற்படுகின்றீர்கள்?' என்று அவரிடம் கேட்டோம்.

'நான் வாழ்க்கையை தொலைக்கவில்லை. அனைத்து மக்களும் பெறும் அனைத்து ஜனநாயக உரிமைகளையும் பெற்று வருகின்றேன். எச்.ஐ.வி. தொற்று நோயாளிகளை ஏதோ  கொலை செய்தவர்களைப் போல பார்க்காதீர்கள். திருமணத்திற்கு முன் உறவு கொள்ளாதீர்கள். சுனில் எவ்வாறு இவ்வைரஸை பெற்றார் என்பது எனக்கு கடைசிவரை தெரிவிக்கவில்லை. தெரிவிக்கும்நிலையிலும் அவர் அன்று இல்லை.


கையடக்கத் தொலைபேசி, பேஸ்புக், இணையத்தளம் மூலமாக  அறிமுகம் இல்லாத எவருடனும் நண்பர்களாகிவிட வேண்டாம். முன்பின் அறிமுகம் அற்றவர்களின் தொடர்பால் வாழ்க்கையைத் தொலைத்துவிட்டு அழுவதில் பயன் இல்லை. இளம் வயதினர் மீது பெற்றோர் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

இன்று சமுதாயத்தையும் இளம் வயதினரையும் கையடக்க தொலைபேசி சீரழித்து வருகின்றன. நேர்மையாக வாழுங்கள். ஒழுக்க நெறிகளில் பிறழாதீர்கள் என்கிறார் காஞ்சனா. உண்மையியே காஞ்சனா ஒரு இரும்பு பெண்தான். இல்லாவிடின் சமூக சேவையில் ஈடுபட முடியுமா?

பாலன் குடில் செய்து வாழும் இளைஞன்
2013-12-22 11:22:08

-எம்.ஜே. பிஸ்ரின் முஹம்மத்-


டிசெம்பர் மாதம் வந்தாலே உலகத்தின் முக்கியமான நகரங்கள் முதல் கிராமங்கள் வரைக்கும் குதூகலம் கொண்டாட்டம்தான். அந்த வகையில் கொழும்பும் இப்போது நத்தாரையும் புதுவருடத்தையும் வரவேற்க புதுப்பொலிவுடன் மிளிர்கின்றது. கொழும்பின் முக்கியமான இடங்கள், காரியாலயங்கள் போன்றன வண்ண வண்ண மின்குமிழ்களாலும், காகிதாதிகளாலும் கண்களை பறிக்கின்றன.
 
கிறிஸ்மஸ் தாத்தா, கிறிஸ்மஸ் மரங்கள், களியாட்டம், கார் பந்தயம் என பல்வேறுபட்ட விடயங்கள் கொழும்பின் இராப் பொழுதுகளை வண்ணமயமாக்கிக் கொண்டிருக்கின்றன. இந்தக்காலப்பகுதியில் பாதையோரங்களில் நிறைய வியாபாரிகளை காண முடியும். சிறு வியாபாரிகள் தம்மால் முடியுமான பண்டிகைக் காலத்துக்கு தேவையான பொருட்களை விற்பனை செய்வார்கள.; பருவகால வியாபாரங்களினால்  தமக்குத் தேவையான மேலதிக வருமானங்களை ஈட்டிக்கொள்ளும் அநேகமானவர்களை கொழும்புப்பகுதிகளில் காணமுடியும்.


பாதையோரத்தில் இயேசுவின் பிறப்பை நினைவுபுடுத்தும் வகையில் வைக்கோல்களால் வேயப்பட்ட சிறிய அழகான பாலன் குடில் விற்பனையாகிக் கொண்டிருக்கின்றன.





வத்தளை நீர்கொழும்பு வீதியில்  அந்த அவ்வழியே கடந்துசெல்வோரை ஒரு முறையேனும் திரும்பிப்பார்க்க வைக்கும் அழகிய பாலன் குடில் அடுக்கிவைத்துக்கொண்டு,  அருகில் பாதையோரமாக அமர்ந்து கொண்டு புதிய பாலன் குடில் அவற்றைத் தயாரித்துக் கொண்டிருந்த ஒரு இளைஞரிடம் அவரைப் பற்றியும் அவரின் தொழில் பற்றியும் கேட்டோம்.


'மாபோல வத்தளைதான் என் சொந்த இடம். எனது பெயர் குமார். ஏனைய நாட்களில் மேசன் வேலை செய்வேன். கிறிஸ்மஸ் பருவகாலத்தில் இப்படி பாலன் குடில் தயார் செய்து வியாபரம் செய்வேன். சிறிய வயதில் இருந்து இப்படியான கைப்பணி வேலைகள் செய்வேன. அதிகம் படிக்கவில்லை. 7 தரம் வரைக்கும் தான் பாடசாலை சென்றேன்  என்றார் அந்த இளைஞர் சிங்களத்தில்.


முக்கியமான பண்டிகைக் காலங்களில் இதுபோன்ற  பொருட்கள் தயாரித்து  வியாபாரம் செய்வது தனது வழக்கம்  எனக் கூறும் அவர், வெசாக் காலத்தில் வெசாக்கூடுகளும் செய்து விற்பாராம்.




இது போன்ற கைப்பணி தொடர்பான போட்டிளிலும் பங்கு பற்றி பணப்பரிசு பெற்றிருக்கிறேன். நத்தார் காலத்தில் தொழுவங்கள் இந்த  நன்றாக விற்கும். ஒவ்வொரு அளவிலான தொழுவங்களுக்கும் ஒவ்வொரு விலை. இந்தத் தொழுவம் 750 ரூபாவுக்கு விற்பேன் (பக்கத்தில் உள்ள தொழுவத்தைக் காட்டுகிறார்). இக்காலப்பகுதியில் வைக்கோல் கிராமப்புறங்களில் இருந்து கொழும்புக்கு வரும் அதனை வாங்கிதான் நான் இதனைச் வடிவமைப்பேன.; இப்படியான சின்ன சின்ன வேலைகள் செய்வதில் எனக்கு ரொம்ப சந்தோஷம என்றார் குமார்.


பல திறமைசாலிகள் வித்தியாசமான படைப்புகளை செய்யும் திறமை உள்ளவர்கள் திரைகளுக்குப் பின்னால் இருக்கதான் செய்கின்றார்கள். குமாரும் அவ்வாறான கலைத்திறன் மிக்க படைப்பாளி அவர் தனக்குள் உள்ள திறமையை சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தனக்கான உழைப்பாகவும் அதனை மாற்றி கொண்டிருக்கிறார்.


கிடைக்கின்ற சிறிய சந்தர்பங்களைப் பயன்படுத்தி, திறமைகளை வெளிக் கொண்டுவந்தால், ஒரு நாள் அது  சாதனையாகக் கூட மாறலாம்.

இலங்கையின் வடமேற்கே மன்னார் மாவட்டம் திருக்கேதீஸ்வரம் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மனிதப்புதைகுழி தொடர்பான இலங்கை அரசின் விசாரணையில் நம்பிக்கையில்லை என்றும், எனவே அது குறித்து சர்வதேச விசாரணை தேவை என்றும் மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் தெரிவித்துள்ளார்.
திருக்கேதீஸ்வரம் பகுதியில் வீதிப் புனரமைப்பு நடவடிக்கைகளுக்கான பணியில் ஈடுபட்டிடிருந்த பணியாளர்கள் நிலத்தைத் தோண்டிபொது, மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அந்த இடத்தைப் பார்வையிட்ட மன்னார் நீதவானின் உத்தரவுக்கமைய அந்த இடத்தைத் தோhண்டும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.
திருக்கேதீஸ்வரம் மனிதப்புதைகுழிமன்னார் நீதவான், சட்ட வைத்திய அதிகாரி மற்றும், காவல்துறையினர் முன்னிலையில் இந்தப் புதைகுழி தோண்டும் பணிகள் முன்னெடுக்கப்பட்டபோது பத்து மண்டையோடுகளும் மனித எலும்புக்கூட்டு எச்சங்களும் கண்டுபிடிக்கப்பட்டு, நீதிமன் உத்தரவுக்கமைய அவைகள் இரசாயன பகுப்பாய்வுக்காக அனுப்பப்பட்டிருக்கின்றன.
கிறிஸ்மஸ் பண்டிகையையடுத்து டிசம்பர் 28 ஆம் தேதிவரை இந்த புதைகுழியைத் தோண்டும் பணிகள் ஒத்திவைக்கப்பட்டிருக்கின்றன.
இந்த மனிதப் புதைகுழி குறித்து கருத்து வெளியிட்ட மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப், மன்னாரில் மட்டுமல்ல, வடக்கில் யாழ்ப்பாணம் உட்பட பல இடங்களில் இவ்வாறான மனிதப் புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தன. ஆயினும் அரச விசாரணைகளின் மூலம், அவைகுறித்த உண்மையான தகவல்கள் வெளிவரவில்லை.
குறிப்பாக செம்மணி பாரிய மனிதப் புதைகுழி நீதவான் ஒருவர் முன்னிலையில் தோண்டப்பட்டு, விசாரணைகள் நடைபெற்ற போதிலும், அங்கு புதைக்கப்பட்டிருந்தவர்கள் தொடர்பிலோ அல்லது யார் அந்த சடலங்களைப் புதைத்தார்கள், புதைக்கப்பட்டவர்கள் யாரால் எவ்வாறு கொல்லப்பட்டார்கள் என்ற உண்மைகளோ கண்டறியப்படவில்லை என்று மன்னார் ஆயர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனால் இலங்கை அரச விசாரணைகளில் தமக்கு நம்பிக்கை இல்லாதிருப்பதனால், திருக்கேதீஸ்வரம் உள்ளிட்ட மனிதப் புதைகுழிகள் தொடர்பில் சர்வதேச விசாரணைகள் நடத்தப்பட்டு உண்மைகள் வெளியில் கொண்டு வரப்பட வேண்டும் என்றும் அவர் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்துள்ளார்.
அரசியல் கட்சிகளிடம் உத்தரவாதம் கோரும் பங்களாதேஷ் கிரிக்கெட் சபை
2013-12-26 11:03:44
கிரிக்கெட் போட்டிகளை இடையூறு இன்றி நடத்துவதுவது தொடர்பாக பங்களாதேஷின் பிரதான அரசியல் கட்சிகளிடம் அந்நாட்டு கிரிக்கெட் சபை பாதுகாப்பு உத்தரவாதம் கோருவதற்குத் தீர்மானித்துள்ளது.

இலங்கை அணியுடனான இரு தரப்பு போட்டிகளையும்   ஆசியக்கிண்ணத் தொடர் மற்றும் இருபது20 உலகக்கிண்ணப் போட்டிகளையும் பங்களாதேஷ் நடத்தவுள்ளது.

image 
ஆனால், அண்மைக்காலமாக பங்களாதேஷில் இடம்பெறும் ஆர்பபாட்டங்கள், அரசியல் வன்முறைகள் காரணமாக அங்கு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பங்குபற்றுவதில் தயக்கம் தெவிக்கப்படுகிறது.

இந்நிலையில் அரசியல் விவகாரங்கள் காரணமாக கிரிக்கெட் போட்டிகளுக்கு பாதிப்பு ஏற்படாது என உத்தரவாதம் அளிக்குமாறு பிரதான அரசியல் கட்சிகளிடம் பங்களாதேஷ் கிரிக்கெட் சபை கோரியுள்ளது.

இலங்கை, பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டிகள் ஜனவரி 27 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ன. பெப்ரவரி மாதம் ஆசிய கிண்ணப் போட்டிகள் பங்களாதேஷில் ஆரம்பமாகவுள்ளன. மார்ச் மாதம் இருபது20 உலகக்கிண்ணப் போட்டிகள் ஆரம்பமாகவுள்ளன.

ஆசிய கிரிக்கெட் பேரவை மற்றும் சர்வதேச கிரிக்கெட் பேரவையின் முக்கிய கூட்டங்கள்  நடைபெறவுள்ள நிலையில் அடுத்த மாதம் முற்பகுதியில் பங்களாதேஷின் அரசியல் கட்சிகளை அந்நாட்டு கிரிக்கெட் சபைத் தலைவர் நஸ்முல் ஹசன் சந்திக்கவுள்ளார்.

பங்களாதேஷ் பிரதமரும் அவாமி லீக் கட்சியின் தலைவருமான ஷேக் ஹஸீனா மற்றும் பி.என்.பி. கட்சியின் தலைவி பேகம் காலிதா ஸியா ஆகியோரை நஸ்முல் ஹசன் சந்திப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

புதையல் தோண்டிய பிரதேச சபை உறுப்பினர் உட்பட 9 பேர் கைது!
2013-12-26 10:45:51
என்.ஜே.பி.எம்
 
புதையல் தோண்டும் முயற்சியில் ஈடுபட்ட பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் உட்பட ஒன்பது பேர் எம்பிலிப்பிட்டிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தனமல்வில பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் உட்பட மேலும் சிலரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த செவ்வாய்க்கிழமை இரவு எம்பிலிபிட்டிய பிரதேசத்தில் வீடு ஒன்றில் இவர்கள் புதையல் தேண்டிக் கொண்டிருந்ததாகப்  பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

புதையல் தோண்ட பயன்படுத்தப்படும் உபகரணங்கள் உற்பட பூஜைப்பொருட்கள் சிலவற்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். 

சாய்ந்தமருதுவில் மீன்வாடி, படகு இயந்திரங்கள், குளிரூட்டிகள், உபகரணங்கள் தீ வைத்து எரிப்பு
2013-12-26 11:52:06
(எம்.ஏ.அஹ்ஸன் அக்தர்)
சாய்ந்தமருது பிரதேசத்தைச் சேர்ந்த மீனவர் ஒருவருக்குச் சொந்தமான மீன்வாடியொன்றும் டிப்பர் வானமொன்றும்  இனந்தெரியாதோரினால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. மீனவர் வாடியின் உரிமையாளர்  சுகவீனமற்ற நிலையில் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையிலேயே இச்சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.
ஆராச்சிக்கட்டு பிரதேச சபையின் எதிர்க்கட்சி தலைவரின் வீட்டின் மீது இரவில் தாக்குதல்!
2013-12-26 12:13:17
ஆராச்சிக்கட்டு பிரதேச சபையின் எதிர்கட்சித் தலைவரின் வீடு இனந்தெரியாத நபர்களால் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது. இந்தச் சம்பவம் நேற்றிரவு (25) இடம்பெற்றுள்ளது.  

ஆட்டோ ஒன்றில் வந்த ஆறு பேர் கொண்ட குழுவினரே தாக்குதலை நடத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளதானகத் தெரிவிக்கப்படுகிறது. ஆராச்சிக்கட்டு பிரதேசசபை எதிரக்கட்சித் தலைவர் கெலும் நிஷாந்தவின் வீடே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை. மேலதிக விசாரணைகளை சிலாபம் பொலிஸார் மேற்கொள்கின்றனர்.

பெண் அனகொண்டா விழுங்கிக் கக்கிய ஆண் கொண்டாவின் உடலை மக்கள் பார்வைக்காகப் பதப்படுத்தும் பணிகள் தீவிரம்
2013-12-23 09:44:52
                       (எம்.ஜே. பிஸ்ரின்)

தெஹிவளை மிருகக்காட்சியசாலை ஊர்வன பிரிவில் ஆண் அனகொண்டாவை விழுங்கிய பெண் அனக்கொண்டா, அதனை இரு தினங்களின் பின்னர் சனிக்கிழமை வெளியே கக்கி விட்டதாக அந்தப் பரிவின் நிர்வாக அதிகாரிகள் ஒருவரான சோமசிறி பீரிஸ் மெட்ரோ நியூஸுக்குத் தெரிவித்தார்

ஆண் அனகொண்டாவின் தலையிலும் முதுகிலும் சில காயங்கள் காணப்பட்டதாகத் தெரிவித்த அவர், உயிரிழந்த ஆன் அனகொண்டாவை மக்கள் பார்வைக்காக வைக்கப்படவுள்ளதாகவும் கூறினார்.

தற்போது பதப்படுத்தும் பணிகள் இடம்பெறுவதாகவும் அவை முற்றுப்பெற்ற பின்னர் மக்கள் பார்வைக்கு வைக்கப்படுமென்றும் அவர் கூறினார். ஆண் அனகொண்டாவை பெண் அனகொண்டா  கடந்த வியாழக்கிழமை விழுங்கியிருந்தது தெரிந்ததே

7500 வருடங்களுக்கு முந்தைய சுனாமியின் தடயங்கள் கொண்ட குகை : 2004 ஆம் ஆண்டு சுனாமி உருவான இடத்தில் கண்டுபிடிப்பு
2013-12-26 12:24:49
7,500 வருடங்களுக்கு முன்னர் தாக்கிய சுனாமியின் தடயங்கள் கொண்ட குகையொன்றை இந்தோனேஷியாவில் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


2004 ஆம் ஆண்டு டிசெம்பர் 26 ஆம் திகதி     இலங்கை, இந்தோனேஷியா, இந்தியா, தாய்லாந்து முதலான நாடுகளில் சுமார் 230,000 பேர் பலியாகுவதற்கு காரணமான பாரிய பூகம்பம் ஏற்பட்ட பகுதிலேயே இந்த குகையும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சுண்ணாம்புக் கற்களாலான இந்த குகை சுமத்ரா தீவின் பண்டா ஆச்சே கரையோரத்திலிருந்து சில மீற்றர் தூரத்தில் உள்ளது. சுமார் ஒரு மீற்றர் உயரமான இந்த குகை ஆயிரக்கணக்கான வருடங்களாக  பாரிய அலைகளுக்கும் காற்றுக்கும்  தாக்குப்பிடித்துள்ளது.

அடுக்கடுக்கான மணல்படிவுகள் கொண்ட இந்த குகையை 2011 ஆம் ஆண்டு ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர். அங்கு கிடைத்த பொருட்களை பரிசோதனைக்குட்படுத்தியதன் மூலம் 2004 ஆம் ஆண்டுக்கு முந்தைய சுனாமிகள் குறித்த  ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்டுகிறது.
சிங்கப்பூரிலுள்ள புவி அவதான நிலையத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் இது குறித்த ஆய்வில் ஈடுபட்டுள்ளனர்.

இதுவரையான ஆய்வுகளின்படி அப்பகுதியில் பாரிய சுனாமிகள் குறித்த கால இடைவெளியில் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

2004 ஆம் ஆண்டின் சுனாமிக்கு முன் இறுதியாக 2880 வருடங்களுக்கு அது போன்ற பாரிய சுனாமி ஏற்பட்டதாம். ஆனால் அதற்கு முந்தைய 500 வருடகாலத்தில் 4 பாரிய சுனாமிகள் ஏற்பட்டதாக மேற்படி அவதான நிலையத்தைச் சேர்ந்த ஆய்வாளரான சார்ள்ஸ் ரூபின் தெரிவித்துள்ளார்.



சில சுனாமிகளுக்கான தடயங்கள் அழிந்திருக்கலாம் எனவும் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். அப்பகுதியில் 1393, 1450 ஆம் ஆண்டுகளில் பாரிய பூகம்பங்கள் ஏற்பட்டதை விஞ்ஞானிகள் அறிந்துள்ளனர்.

இந்தோனேஷியத் தீவுக்கூட்டமானது புவித் தட்டுகள் இணையும் பகுதியில் அமைந்துள்ளது. இத்தகைய புவித்தட்டுக்களின் அசைவினாலேயே பூகம்பம் ஏற்படுகிறது. சமுத்திரத்தின் கீழ்  பாரிய பூகம்பங்கள் ஏற்படும்பேர்து சுனாமி ஏற்படுகின்றன.

இந்தோனேஷிய பிராந்தியத்தின் கடந்த காலத்தை பற்றி அறிந்துகொள்வதற்காக 2004 ஆம் ஆண்டு முதல் பல்வேறு ஆய்வுகளை விஞ்ஞானிகள் அப்பகுதியில் மேற்கொண்டு வருகின்றனர்.

சமியின் அதிரடியில் முதல் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் வெற்றி
2013-12-26 13:34:03
நியூஸிலாந்து அணிக்கு எதிரான முதலாவது ஒரு நாள் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி டெரன் சமியின் அதிரடியில் 2 விக்கெட்களால் வெற்றி பெற்றுள்ளது.



நியூஸிலாந்தின் ஒக்லேண்ட் ஈடன் பார்க் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து 42.1 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 156 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

நியூஸி. அணித்தலைவர் பிரண்டன் மெக்கலம் 51 ஓட்டங்களையும் நாதன் மெக்கலம் 47 ஓட்டங்களையும் பெற்றனர். ஏனைய வீரர்கள் அனைவரும் இணைந்து மொத்தமாக 36 ஓட்டங்கைள மாத்திரமே பெற்று ஏமாற்றமளித்தனர். நீண்ட இளைவெளியின் பின்னர் நியூஸிலாந்து அணியில் இடம்பிடித்த ஜெஸி ரைடர் எதுவித ஓட்டங்களையும் பெறாது ஆட்டமிழந்தார்.

பந்து வீச்சில் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் தலைவர் ட்வைன் பிராவோ 4 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

தொடர்ந்த 157 ஓட்டங்கள் என்ற வெற்றியுடன் களமிறங்கிய மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்வரிசை துடுப்பாட் வீரர்கள் விரைவாக ஆட்டமிழந்து வெளியேறினர்.

96 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்களை இழந்து தடுமாறியது மேற்கிந்தியத் தீவுகள் அணி. பின்னர் களம் புகுந்து டெரன் சமி அதிரடியாக துடுப்பெடுத்தாடி 27 பந்துகளில் 3 சிக்ஸர்கள் மற்றும் 5 பௌண்டரிகள் அடங்கலாக 43 ஓட்டங்களைப் பெற்று அணியை வெற்றி பெறச் செய்தார்.

இறுதியில் 27.3 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 157 ஓட்டங்களைப் பெற்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி 135 பந்துகள் மீதமிருக்க 2 விக்கெட்களால் வெற்றி பெற்றது. சமி ஆட்டமிழக்காது 43 ஓட்டங்களையும் சிம்மன்ஸ் 34 ஓட்டங்களையும் பெற்றனர்.

நியூஸிலாந்து அணியின் பந்துவீச்சாளர்களில் மெக்லகன் 5 விக்கெட்களை வீழ்த்தினார்.

போட்டியின் ஆட்ட நாயகனாக அதிரடியாக துடுப்பெடுத்தாடிய டெரன் சமி தெரிவானார். தொடரின் 2ஆவது ஒருநாள் போட்டி எதிர்வரும் 29ஆம் திகதி நடைபெறவுள்ளது.

யுக்ரைன் அரசாங்கத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களில் பங்குபற்றும் அழகுராணி
2013-12-26 15:10:15
அழகுராணிகளாக தெரிவுசெய்யப்படும் யுவதிகளில் பெரும்பாலானோர் பொதுவாக விழாக்களில் அதிதியாக கலந்துகொள்வது, விளம்பரங்களிலும் சினிமாவிலும் நடிப்பது போன்றவற்றிலேயே தமது கூடுதலான நேரத்தை செலவிடுவர்.

ஆனால், யுக்ரைன் நாட்டில் இவ்வருட அழகுராணியாகத் தெரிவான அனா ஸயாசிக்வ்ஸ்கா அந்நாட்டு மக்களுடன் இணைந்து அரசியல் போராட்டங்களில் ஈடுபடுகிறார்.

யுக்ரேனில் ஜனாதிபதி விக்டர் யனுகோவிச் தலைமையிலான  அரசாங்கத்துக்கு எதிராக நடைபெறும் பாரிய  ஆர்ப்பாட்டங்களில் அனா ஸயாசிக்வ்ஸ்காவும் பங்குபற்றுகிறார்.

21  வயதான அனா ஸயாசிக்வ்ஸ்கா, கடந்த மாதம் மிஸ் யுக்ரேன் 2013 அழகுரணியாகத் தெரிவானார். கடந்த செப்டெம்பர் மாதம் இந்தோனேஷியாவில் நடைபெற்ற உலக அழகுராணி போட்டியில் யுக்ரைன் சார்பில் அவர் பங்குபற்றியமை குறிப்பிடத்தக்கது.

இதன் மூலம்  யுக்ரைனில் நன்கு அறியப்பட்ட பிரபலங்களில் ஒருவரானார் அனா ஸயாசிக்வ்ஸ்கா. இந்தப் புகழை அவர் தனது சொந்த வாழ்க்கையை முன்னேற்றவதற்காக மாத்திரம் பயன்படுத்திக்கொள்ள எண்ணவில்லை.

அண்மைக்காலமாக யுக்ரைனில் அரசாங்கத்துக்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறுகின்றன. தலைநகர் கீவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்குபற்றினர். இந்த ஆர்ப்பாட்டங்களின் போது அனா ஸயாசிக்வ்ஸ்காவும் பொதுமக்களுடன் இணைந்துகொண்டார். தனது நாட்டின் எதிர்காலம் குறித்து தான் கவலை கொண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.



இரு நாட்களின்பின், ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு தேநீர் முதலான பானங்களை வழங்கும் தொண்டர்களுடன் அவர் இணைந்துகொண்டார்.  இக்கூடாரங்களில் அவர் காணப்படும் புகைப்படங்களும் வெளியாகியுள்ளன.

'வெறுமனே நின்றுகொண்டிருக்காமல் ஏதேனும் பலனுள்ள விடயங்களை செய்வதற்கு நான் தீர்மானித்தேன்' என அவர் கூறியுள்ளார்.

Wednesday, 25 December 2013

கேக் மூலம் தயாரிக்கப்பட்ட நத்தார் விருந்துப் பொருட்கள்
2013-12-25 13:39:50
லண்டனைச் சேர்ந்த சமையல் நிபுணர்கள் மூவர், நத்தார் விருந்துக்கான அனைத்து பொருட்களையும் கேக் மூலம் செய்துள்ளனர். வான்கோழி இறைச்சி, கரட், சொக்லேற்  அனைத்துமே கேக் மற்றும் ஐஸிங் மூலம் உருவாக்கப்பட்டுள்ளன.

 




கரோலின் வைட் எனும் பெண்ணிந் சிந்தனையில் உருவான திட்டம் இது. மூன்று சமையல் நிபுணர்கள் சுமார் 40 மணித்தியாலங்களில் இந்த பொருட்களை தயாரித்துள்ளனர்.


வித்தியாசமான கேக் தயாரிக்கும்  பயிற்சி நிலையமொன்றையும் கரோலின் வைட் நடத்தி வருகிறார். வருடாந்தம் சுமார் 5000 மாணவர்கள் இவரின் பயிற்சிநிலையத்தில்

அங்குலானையில் பொலிஸார்- பிரதேசவாசிகள் முறுகல்!
2013-12-25 13:19:14
கொழும்புக்கு அண்மித்தான அங்குலான பிரதேசத்தில் இன்று காலை அசாதாரண சூழ்நிலை நிலவியது. பொலிஸாருக்கும் பொதுமக்களுக்குமிடையில் ஏற்பட்ட முறுகல் நிலையே இதற்குக் காரணமெனத் தெரிவிக்கப்படுகிறது.


அங்குலான கடற்கரை பிரதேசத்திலுள்ள வீடொன்றில் மதுபானம் விற்கப்படுவதாக  கேள்வியுற்று, அங்கு சென்ற பொலிஸாரை அந்தப் பிரதேசத்தில் காணப்பட்டவர்கள் தடுக்க முயற்சித்த போதே இந்த அசாதாரண நிலைமை உருவாகியதாகத் கூறப்படுகிறது.


இதனையடுத்து அங்கு பாதுகாப்புக்காக மேலதிக பொலிஸார் குவிக்கப்பட்டனர். பிந்திக் கிடைத்த தகவலின்படி சந்தேகத்தின் பேரில் பொலிஸார் இருவரைக் கைது செய்துள்ளளனர்
ஏ.கே. 47 (AK 47) துப்பாக்கி தொடர்பில் அதிகம் அறியப்படாத சில தகவல்கள்
2013-12-25 15:02:13
உலகில் மிக அதிகமாக பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியான ஏ.கே. 47 (AK 47) துப்பாக்கியை கண்டுபிடித்த ரஷ்யாவைச் சேர்ந்த மிகைல் கலஸ்னிகோவ் தனது 94 ஆவது வயதில் நேற்று ரஷ்யாவில் காலமானார்.



இரண்டாம் உலக யுத்தத்தின்போது சோவியத் யூனியன் இராணுவத்தில் பீரங்கி தளபதியாக கலஸ்னிகோவ் பணியாற்றினார். 1942ஆம் ஆண்டு பிரையன்ஸ் போரில் தோளில் காயமடைந்தார். இதன் பின்னரே இவர் ஆதங்கள் வடிவமைப்பாளராக மாறினார்.

காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட் நிலையில் சோவியத் யூனியனின் காயமடைந்த படைவீரர்கள் அப்போதைய துப்பாக்கிகள் (சுகைடநள) பற்றி குறைகூறுவதையும் அதன் மாற்றம் பற்றியும் அறிந்தார்.

தொடர்ந்து 2ஆம் உலக யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் 1945ஆம் ஆண்டு முதல் ஏ.கே. 47 துப்பாக்கியை உருவாக்கத் ஆரம்பித்தார். 1947ஆம் ஆண்டு சோவியத் படைகளினால் பரீட்சார்த்தமாக பயன்படுத்தப்பட்டு பல சோதனைகள், பரீட்சார்த்த பாவனையின் பின்னர் 1949 ஆம் ஆண்டு சோவியத் யூனியன் இராணுவத்தினால் ஏ.கே. 47 துப்பாக்கி உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

அதன்பின் சுமார் 7.5 கோடி ஏ.கே. துப்பாக்கிகள் தயாரிக்கப்பட்டுள்ள அதேவேளை 10 கோடி ஏ.கே. ரக துப்பாக்கிகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. பல நாடுகளின் இராணுவங்களினதும் கிளர்ச்சிப் படைகளினதும் பிரதான துப்பாக்கியாக ஏ.கே. 47 துப்பாக்கி விளங்கியது.



இத்துப்பாக்கி கண்டுபிடிப்புக்காக பல்வேறு விருதுகளை ஓர்டர் ஒப் லெனின், ஓர்டர் ஒப் ரெட் ஸ்டார் மற்றும் ஓர்டா ஒப் ஒக்டோபர் ரிவொலுஷன் உள்ளிட்ட கௌரப்பட்டங்களும் மிகைல் கலஸ்னிகோவ் பெற்றமை குறிப்பிடத்தக்கது.



அதிகம் அறியப்படாத சில தகவல்கள்

1947ஆம் ஆண்டு உற்பத்தி செய்யப்பட்டதுடன் கலஸ்னிகோவ் கண்டுபித்த தன்னியக்க துப்பாக்கி என்பதாலேயே இத்துப்பாக்கிக்கு Avtomat Kalashnikov 1947 எனப் பெயரிடக் காரணமாயிற்று. இதன் சுருக்கமே AK 47 ஆகும். அத்துடன் ரஷ்ய மொழி வழக்கில் 'கலஸ்' எனவும் இது அழைக்கப்படுகின்றது.

** சுமார் 150 சிறியரக ஆயுதங்களை உருவாக்கியுள்ள கலஸ்னிகோவ் ரஷ்யா மக்களின் படைப்பு மேதையின் சின்னம் என அழைக்கப்பட்டார்.


** நீண்ட கால உழைப்பு, உற்பத்திச் செலவு குறைந்தது, இலகுவான் பயன்பாடு மற்றும் அதிக உற்பத்தி வசிகளைக்கொண்ட  ஏ.கே. 47 துப்பாக்கி உலகம் பூராகவும் வெற்றிகரமாக சுட்டுள்ளது.

** உலகின் அதிகளவில் பரந்து காணப்படும் துப்பாக்கி எனும் சாதனையுடன் ஏ.கே. 47 கின்னஸ் சாதனைப் புத்தகத்திலும் இடம்பிடித்துள்ளது. தற்போது உலகில் 100 மில்லியன் கலாஸ்னிகோவ் துப்பாக்கிகள் பயன்பட்டில் உள்ளது.
அப்கானிஸ்தான் முதல் ஸிம்பாப்வே வரையில் 106 நாட்டு படைவீரர்கள் மற்றும் விசேட அதிரடிப்படையினர் ஏ.கே. 47 துப்பாக்கியை ஏந்தியுள்ளனர்.

** ஏ.கே. 47 ரஷ்யாவில் கண்டுபிடிக்கப்பட்டாலும் தற்போது அனுமதிபெற்று சீனா, இஸ்ரேல், இந்தியா, எகிப்து மற்றும் நைஜீரியா உள்ளிட்ட 30க்கும் அதிமான நாடுகளில் உற்பத்தி செய்யப்படுகின்றது.

** ஆட்லரி பயர், ரொக்கெட் மற்றும் வான்வழி தாக்குதல்களை விட அதிகளில் ஏ.கே ரக துப்பாக்கிகளினால் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது. கலஸ் துப்பாக்கியால் வருடத்துக்கு சுமார் 2.5 இலட்சம் பேர் இறப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.



** தனது கண்டுபிடிப்பினால் கலஸ்னிகோவ் உயிரைக் கொன்றதில்லை. பாதுகாப்புக்காக கண்டுபிடிக்கப்பட்டது ஏ.கே. 47. இதனால் வன்முறை தவிர்கப்படாதது அரசியல்வாதிகள் குற்றம் என 2007 இல் கலஸ்னிகோவ் குறிப்பிட்டுள்ளார்.

** வீடியோக்களில் எப்போது ஏ.கே. ரக துப்பாக்கியுடன் தோன்றுவார் அல்-கைதாவின் நிறுவுனர் ஒஸாமா பின்லேடன்

** மொஸாம்பிக் நாட்டின் தேசியக் கொடியில் ஏ.கே.47 துப்பாக்கி இடம்பெற்றுள்ளது.



** முன்னாள் ஈராக் ஜனாதிபதி சதாம் ஹுஸைனிடமிருந்து தங்கமுலாமிடப்பட்ட ஏ.கே. 47 ரக துப்பாக்கி அமெரிக்க படைகளால் மீட்கப்பட்டது.

** கொலம்பிய நாட்டு கலைஞர் சீஸர் லோபஸ் சில ஏ.கே. 47 துப்பாக்கிகளை கிட்டாராக மாற்றி வடிவமைத்தார். இதில் ஒன்று முன்னாள் ஐ.நா. செயலாளர் கோபி அனானுக்கு 2007இல் பரிசாக வழங்கப்பட்டது.



ஏ.எம்.ஆர்

தேசிய பொருளாதாரத்தை கருத்திற்கொண்டே புதிய அரங்குகள் நிர்மாணிக்கப்பட்டன : நிஷாந்த ரணதுங்க
2013-12-25 16:01:04
நாட்டின் தேசிய பொருளாதாரத்தை கருத்திற்கொண்டே ஹம்பாந்தோட்டையிலும், பல்லேகலவிலும் புதிய விளையாட்டு அரங்குகளை நிர்மாணிப்பதற்கு ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் தீர்மானித்தது என அந்நிறுவனத்தின் செயலாளர் நிஷாந்த ரணதுங்க தெரிவித்துள்ளார்.

2011 உலகக்கிண்ணப் போட்டிகளுக்காக இவ்விரு புதிய அரங்குகளை நிர்மாணிப்பதற்கும் கொழும்பில் ஆர்.பிரேமதாஸ அரங்கை நிர்மாணிப்பதற்கும் பெருமளவு பணத்தை செலவிட்ட நிலையில், ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் சுமார் 7 கோடி டொலர் கடனில் தள்ளப்பட்டுள்ளது.

இது குறித்த விமர்சனங்கள் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள நிஷாந்த ரணதுங்க, தேசிய பொருளாதாரத்தைக் கருத்திற்கொண்டே இந்த அரங்குகள் நிர்மாணிக்கப்பட்டதாகவும் ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் வருமானத்துக்காக அவை நிர்மாணிக்கப்படவில்லை. இந்த முக்கியமான விடயத்தை அரசியல்வாதிகள் இதை மறந்துவிடுகின்றனர் எனவும் கூறியுள்ளார்.

உலகக்கிண்ணப் போட்டிகளின்போது ஐ.சி.சி. இலங்கையில் 30 மில்லியன் டொலர்களை செலவிட்டது. 2012 ஆம் ஆண்டு இருபது20 உலகக்கிண்ணப் போட்டிகளின்போது மீண்டும்  35 முதல் 40 மில்லியன் டொலர்களை ஐ.சி.சி. செலவிட்டது. அதாவது பணம் நேரடியாக எமக்கு வரவில்லை. அப்பணம் ஹோட்டல்கள், பயண முகவர்கள், உணவு விநியோகஸ்தர்கள், போக்குவரத்து முகவர்கள், விமான சேவை நிறுவனங்கள் உட்பட பலருக்கு அப்பணம் சென்றது' எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பிரத்தியேக வகுப்புக்கு சென்ற காத்தான்குடி மாணவி மாயம்!
2013-12-25 16:16:58
காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள காத்தான்குடி பிரதேசத்ததைச் சேர்ந்த பாடசாலை மாணவியொருவரை செவ்வாய்க்கிழமை தொடக்கம் காணவில்லையென காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று செய்யப்பட்டுள்ளது.

காத்தான்குடி முதலாம் குறிச்சியைச் சேர்ந்த 14 வயதான மாணவி செவ்வாய்க்கிழமை காத்தான்குடியிலுள்ள பிரத்தியேக வகுப்பு ஒன்றுக்கு சென்றதாகவும் பின்னர் குறித்த மாணவி வீடு திரும்பவில்லை எனவும் அம் மாணவியின் உறவினர் ஒருவரினால் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக காத்தான்குடி பொலிஸார் விசாரணைகளை நடாத்தி வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நாளைய டெஸ்ட் போட்டியுடன் ஓய்வு பெறும் ஜெக்ஸ் கலீஸ்
2013-12-25 17:47:18
தென் ஆபிரிக்காவின் மூத்த வீரரும் நட்சத்திர சகலதுறைவீரருமான ஜெக்ஸ் கலீஸ் நாளை டேர்பனில் ஆரம்பமாகவுள்ள இந்திய அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியுடன் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறவுள்ளதாக அறிவித்துள்ளார்.



ஜெக் கலீஸின் ஓய்வு குறித்த தகவலை தென் ஆபிரிக்க கிரிக்கெட் சபை இன்று அதனது உத்தியோகபூர் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

தனது ஓய்வு குறித்து 38 வயதான ஜெக் கலீஸ் கூறுகையில், 'இது ஒரு இலகுவான தீர்மானமாக அமையவில்லை. ஆனால் ஓய்வுபெறுவதற்கான நேரம் இதுவென நான் உணர்கின்றேன். ஆனால் கிரிக்கெட்டில் இருந்து முழுமையாக விடைபெற நான் எதிர்பார்க்கவில்லை.

சிறப்பாக விளையாடுவதுடன் உடலும் ஒத்துழைத்தால் 2015ஆம் ஆண்டு உலகக்கிண்ணம் வரையில் தென் ஆபிரிக்காவுக்கா ஒரு நாள் போட்டிகளில் விளையாட ஆர்மாகவுள்ளேன்' எனத் தெரிவித்துள்ளார்.

1995ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமாக ஜெக்ஸ் கலீஸ் இதுவரையில் 165 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 44 சதங்களையும் 58 அரைச் சதங்கள் அடங்கலாக 13174 ஓட்டங்களைக் குவித்துள்ளார். அத்துடன் 292 விக்கெட்களையும் வீழ்த்தியுள்ளார்.

தொடர்ந்தும் மட்டுப்படுத்தப்பட்ட போட்டிகளில் விளையாடவுள்ள கலீஸ் 325 ஓரு நாள் போட்டிகளில் விளையாடி 17 சதங்களும் 86 அரைச் சதங்களும் அடங்கலாக 11574 ஓட்டங்களைக் குவித்துள்ளதுடன் 273 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.

இலங்கையர் ஒருவர் வருடமொன்றுக்கு 2 கிலோ 300 கிராம் மிளகாயை உண்பதாகத் தகவல்
2013-12-25 19:04:32
(எஸ்.கே.)

imageஇலங்கையில் நபரொருவர் வருடமொன்றுக்கு இரண்டு கிலோ 300 கிராம் மிளகாயை உட்கொள்வதாகவும் மிளகாயில் போஷாக்கு குணம் இல்லாதபோதும் அதன் உறைப்புத் தன்மைக்காக மிளகாயை சேர்த்து சமைப்பதை மக்கள் வழக்கமாக கொண்டுள்ளதாக விவசாயப் பணிப்பாளர் நாயகம் கலாநிதி ரொஹான் விஜேகோன் தெரிவிக்கின்றார்.

மிளகாய் உற்பத்தியைப் பெருக்குவதற்காக விவசாய திணைக்களத்தைச் சேர்ந்த 3000 அதிகாரிகள் கலந்துகொண்ட கருத்தரங்கில் அவர் இத்தகவலைத் தெரிவித்தார். இக்கருத்தரங்கு கண்ணொருவ விவசாய ஆராய்ச்சி பண்ணையில் நடைபெற்றது.

பாவனையாளர்களின் மிளகாய் தேவையை பூர்த்தி செய்ய வருடமொன்றுக்கு 42,782 மெட்ரிக் தொன் மிளகாய் இறக்குமதி செய்யப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

ஈராக்கில் கிறிஸ்தவர்கள் வாழும் பகுதியில் கிறிஸ்மஸ் தினத்தில் கார் குண்டுவெடிப்பு : 34 பேர் பலி
2013-12-25 19:36:24

ஈராக்கில் கிறிஸ்தவர்கள் வாழும் பகுதியில் கிறிஸ்மஸ் தினமான இன்று இடம்பெற்ற கார் குண்டுத் தாக்குதலில் 34 பேர் பலியாகியுள்ளனர்.
மேற்கு பக்தாத்திலுள்ள தேவாலயத்துக்கு அருகிலேயே இக்குண்டுத்தாக்குதல் இடம்பெற்றுள்ளது. கிறிஸ்மஸ் வழிபாடுகளின் பின்னர் குண்டு வெடிப்பு இடம்பெற்றதால் 34 பேர் பலியானதுடன் பலர் காயமடைந்துள்ளனர்.
இப்பகுதியில் கடந்த 2010ஆம் ஆண்டும் கிறிஸ்மஸ் தினத்தில் குண்டு வெடித்தமை குறிப்பிடத்தக்கது,