பாலன் குடில் செய்து வாழும் இளைஞன்
2013-12-22 11:22:08
-எம்.ஜே. பிஸ்ரின் முஹம்மத்-
டிசெம்பர் மாதம் வந்தாலே உலகத்தின் முக்கியமான நகரங்கள் முதல் கிராமங்கள் வரைக்கும் குதூகலம் கொண்டாட்டம்தான். அந்த வகையில் கொழும்பும் இப்போது நத்தாரையும் புதுவருடத்தையும் வரவேற்க புதுப்பொலிவுடன் மிளிர்கின்றது. கொழும்பின் முக்கியமான இடங்கள், காரியாலயங்கள் போன்றன வண்ண வண்ண மின்குமிழ்களாலும், காகிதாதிகளாலும் கண்களை பறிக்கின்றன.
கிறிஸ்மஸ் தாத்தா, கிறிஸ்மஸ் மரங்கள், களியாட்டம், கார் பந்தயம் என பல்வேறுபட்ட விடயங்கள் கொழும்பின் இராப் பொழுதுகளை வண்ணமயமாக்கிக் கொண்டிருக்கின்றன. இந்தக்காலப்பகுதியில் பாதையோரங்களில் நிறைய வியாபாரிகளை காண முடியும். சிறு வியாபாரிகள் தம்மால் முடியுமான பண்டிகைக் காலத்துக்கு தேவையான பொருட்களை விற்பனை செய்வார்கள.; பருவகால வியாபாரங்களினால் தமக்குத் தேவையான மேலதிக வருமானங்களை ஈட்டிக்கொள்ளும் அநேகமானவர்களை கொழும்புப்பகுதிகளில் காணமுடியும்.
பாதையோரத்தில் இயேசுவின் பிறப்பை நினைவுபுடுத்தும் வகையில் வைக்கோல்களால் வேயப்பட்ட சிறிய அழகான பாலன் குடில் விற்பனையாகிக் கொண்டிருக்கின்றன.
வத்தளை நீர்கொழும்பு வீதியில் அந்த அவ்வழியே கடந்துசெல்வோரை ஒரு முறையேனும் திரும்பிப்பார்க்க வைக்கும் அழகிய பாலன் குடில் அடுக்கிவைத்துக்கொண்டு, அருகில் பாதையோரமாக அமர்ந்து கொண்டு புதிய பாலன் குடில் அவற்றைத் தயாரித்துக் கொண்டிருந்த ஒரு இளைஞரிடம் அவரைப் பற்றியும் அவரின் தொழில் பற்றியும் கேட்டோம்.
'மாபோல வத்தளைதான் என் சொந்த இடம். எனது பெயர் குமார். ஏனைய நாட்களில் மேசன் வேலை செய்வேன். கிறிஸ்மஸ் பருவகாலத்தில் இப்படி பாலன் குடில் தயார் செய்து வியாபரம் செய்வேன். சிறிய வயதில் இருந்து இப்படியான கைப்பணி வேலைகள் செய்வேன. அதிகம் படிக்கவில்லை. 7 தரம் வரைக்கும் தான் பாடசாலை சென்றேன் என்றார் அந்த இளைஞர் சிங்களத்தில்.
முக்கியமான பண்டிகைக் காலங்களில் இதுபோன்ற பொருட்கள் தயாரித்து வியாபாரம் செய்வது தனது வழக்கம் எனக் கூறும் அவர், வெசாக் காலத்தில் வெசாக்கூடுகளும் செய்து விற்பாராம்.
இது போன்ற கைப்பணி தொடர்பான போட்டிளிலும் பங்கு பற்றி பணப்பரிசு பெற்றிருக்கிறேன். நத்தார் காலத்தில் தொழுவங்கள் இந்த நன்றாக விற்கும். ஒவ்வொரு அளவிலான தொழுவங்களுக்கும் ஒவ்வொரு விலை. இந்தத் தொழுவம் 750 ரூபாவுக்கு விற்பேன் (பக்கத்தில் உள்ள தொழுவத்தைக் காட்டுகிறார்). இக்காலப்பகுதியில் வைக்கோல் கிராமப்புறங்களில் இருந்து கொழும்புக்கு வரும் அதனை வாங்கிதான் நான் இதனைச் வடிவமைப்பேன.; இப்படியான சின்ன சின்ன வேலைகள் செய்வதில் எனக்கு ரொம்ப சந்தோஷம என்றார் குமார்.
பல திறமைசாலிகள் வித்தியாசமான படைப்புகளை செய்யும் திறமை உள்ளவர்கள் திரைகளுக்குப் பின்னால் இருக்கதான் செய்கின்றார்கள். குமாரும் அவ்வாறான கலைத்திறன் மிக்க படைப்பாளி அவர் தனக்குள் உள்ள திறமையை சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தனக்கான உழைப்பாகவும் அதனை மாற்றி கொண்டிருக்கிறார்.
கிடைக்கின்ற சிறிய சந்தர்பங்களைப் பயன்படுத்தி, திறமைகளை வெளிக் கொண்டுவந்தால், ஒரு நாள் அது சாதனையாகக் கூட மாறலாம்.

No comments:
Post a Comment