ஏ.கே. 47 (AK 47) துப்பாக்கி தொடர்பில் அதிகம் அறியப்படாத சில தகவல்கள்
2013-12-25 15:02:13
உலகில் மிக அதிகமாக பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியான ஏ.கே. 47 (AK 47) துப்பாக்கியை கண்டுபிடித்த ரஷ்யாவைச் சேர்ந்த மிகைல் கலஸ்னிகோவ் தனது 94 ஆவது வயதில் நேற்று ரஷ்யாவில் காலமானார்.
இரண்டாம் உலக யுத்தத்தின்போது சோவியத் யூனியன் இராணுவத்தில் பீரங்கி தளபதியாக கலஸ்னிகோவ் பணியாற்றினார். 1942ஆம் ஆண்டு பிரையன்ஸ் போரில் தோளில் காயமடைந்தார். இதன் பின்னரே இவர் ஆதங்கள் வடிவமைப்பாளராக மாறினார்.
காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட் நிலையில் சோவியத் யூனியனின் காயமடைந்த படைவீரர்கள் அப்போதைய துப்பாக்கிகள் (சுகைடநள) பற்றி குறைகூறுவதையும் அதன் மாற்றம் பற்றியும் அறிந்தார்.
தொடர்ந்து 2ஆம் உலக யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் 1945ஆம் ஆண்டு முதல் ஏ.கே. 47 துப்பாக்கியை உருவாக்கத் ஆரம்பித்தார். 1947ஆம் ஆண்டு சோவியத் படைகளினால் பரீட்சார்த்தமாக பயன்படுத்தப்பட்டு பல சோதனைகள், பரீட்சார்த்த பாவனையின் பின்னர் 1949 ஆம் ஆண்டு சோவியத் யூனியன் இராணுவத்தினால் ஏ.கே. 47 துப்பாக்கி உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
அதன்பின் சுமார் 7.5 கோடி ஏ.கே. துப்பாக்கிகள் தயாரிக்கப்பட்டுள்ள அதேவேளை 10 கோடி ஏ.கே. ரக துப்பாக்கிகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. பல நாடுகளின் இராணுவங்களினதும் கிளர்ச்சிப் படைகளினதும் பிரதான துப்பாக்கியாக ஏ.கே. 47 துப்பாக்கி விளங்கியது.
இத்துப்பாக்கி கண்டுபிடிப்புக்காக பல்வேறு விருதுகளை ஓர்டர் ஒப் லெனின், ஓர்டர் ஒப் ரெட் ஸ்டார் மற்றும் ஓர்டா ஒப் ஒக்டோபர் ரிவொலுஷன் உள்ளிட்ட கௌரப்பட்டங்களும் மிகைல் கலஸ்னிகோவ் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
அதிகம் அறியப்படாத சில தகவல்கள்
1947ஆம் ஆண்டு உற்பத்தி செய்யப்பட்டதுடன் கலஸ்னிகோவ் கண்டுபித்த தன்னியக்க துப்பாக்கி என்பதாலேயே இத்துப்பாக்கிக்கு Avtomat Kalashnikov 1947 எனப் பெயரிடக் காரணமாயிற்று. இதன் சுருக்கமே AK 47 ஆகும். அத்துடன் ரஷ்ய மொழி வழக்கில் 'கலஸ்' எனவும் இது அழைக்கப்படுகின்றது.
** சுமார் 150 சிறியரக ஆயுதங்களை உருவாக்கியுள்ள கலஸ்னிகோவ் ரஷ்யா மக்களின் படைப்பு மேதையின் சின்னம் என அழைக்கப்பட்டார்.
** நீண்ட கால உழைப்பு, உற்பத்திச் செலவு குறைந்தது, இலகுவான் பயன்பாடு மற்றும் அதிக உற்பத்தி வசிகளைக்கொண்ட ஏ.கே. 47 துப்பாக்கி உலகம் பூராகவும் வெற்றிகரமாக சுட்டுள்ளது.
** உலகின் அதிகளவில் பரந்து காணப்படும் துப்பாக்கி எனும் சாதனையுடன் ஏ.கே. 47 கின்னஸ் சாதனைப் புத்தகத்திலும் இடம்பிடித்துள்ளது. தற்போது உலகில் 100 மில்லியன் கலாஸ்னிகோவ் துப்பாக்கிகள் பயன்பட்டில் உள்ளது.
அப்கானிஸ்தான் முதல் ஸிம்பாப்வே வரையில் 106 நாட்டு படைவீரர்கள் மற்றும் விசேட அதிரடிப்படையினர் ஏ.கே. 47 துப்பாக்கியை ஏந்தியுள்ளனர்.
** ஏ.கே. 47 ரஷ்யாவில் கண்டுபிடிக்கப்பட்டாலும் தற்போது அனுமதிபெற்று சீனா, இஸ்ரேல், இந்தியா, எகிப்து மற்றும் நைஜீரியா உள்ளிட்ட 30க்கும் அதிமான நாடுகளில் உற்பத்தி செய்யப்படுகின்றது.
** ஆட்லரி பயர், ரொக்கெட் மற்றும் வான்வழி தாக்குதல்களை விட அதிகளில் ஏ.கே ரக துப்பாக்கிகளினால் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது. கலஸ் துப்பாக்கியால் வருடத்துக்கு சுமார் 2.5 இலட்சம் பேர் இறப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.
** தனது கண்டுபிடிப்பினால் கலஸ்னிகோவ் உயிரைக் கொன்றதில்லை. பாதுகாப்புக்காக கண்டுபிடிக்கப்பட்டது ஏ.கே. 47. இதனால் வன்முறை தவிர்கப்படாதது அரசியல்வாதிகள் குற்றம் என 2007 இல் கலஸ்னிகோவ் குறிப்பிட்டுள்ளார்.
** வீடியோக்களில் எப்போது ஏ.கே. ரக துப்பாக்கியுடன் தோன்றுவார் அல்-கைதாவின் நிறுவுனர் ஒஸாமா பின்லேடன்
** மொஸாம்பிக் நாட்டின் தேசியக் கொடியில் ஏ.கே.47 துப்பாக்கி இடம்பெற்றுள்ளது.
** முன்னாள் ஈராக் ஜனாதிபதி சதாம் ஹுஸைனிடமிருந்து தங்கமுலாமிடப்பட்ட ஏ.கே. 47 ரக துப்பாக்கி அமெரிக்க படைகளால் மீட்கப்பட்டது.
** கொலம்பிய நாட்டு கலைஞர் சீஸர் லோபஸ் சில ஏ.கே. 47 துப்பாக்கிகளை கிட்டாராக மாற்றி வடிவமைத்தார். இதில் ஒன்று முன்னாள் ஐ.நா. செயலாளர் கோபி அனானுக்கு 2007இல் பரிசாக வழங்கப்பட்டது.

ஏ.எம்.ஆர்