அங்குலானையில் பொலிஸார்- பிரதேசவாசிகள் முறுகல்!
2013-12-25 13:19:14
கொழும்புக்கு அண்மித்தான அங்குலான பிரதேசத்தில் இன்று காலை அசாதாரண சூழ்நிலை நிலவியது. பொலிஸாருக்கும் பொதுமக்களுக்குமிடையில் ஏற்பட்ட முறுகல் நிலையே இதற்குக் காரணமெனத் தெரிவிக்கப்படுகிறது.
அங்குலான கடற்கரை பிரதேசத்திலுள்ள வீடொன்றில் மதுபானம் விற்கப்படுவதாக கேள்வியுற்று, அங்கு சென்ற பொலிஸாரை அந்தப் பிரதேசத்தில் காணப்பட்டவர்கள் தடுக்க முயற்சித்த போதே இந்த அசாதாரண நிலைமை உருவாகியதாகத் கூறப்படுகிறது.
இதனையடுத்து அங்கு பாதுகாப்புக்காக மேலதிக பொலிஸார் குவிக்கப்பட்டனர். பிந்திக் கிடைத்த தகவலின்படி சந்தேகத்தின் பேரில் பொலிஸார் இருவரைக் கைது செய்துள்ளளனர்

No comments:
Post a Comment