யுக்ரைன் அரசாங்கத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களில் பங்குபற்றும் அழகுராணி
2013-12-26 15:10:15
அழகுராணிகளாக தெரிவுசெய்யப்படும் யுவதிகளில் பெரும்பாலானோர் பொதுவாக விழாக்களில் அதிதியாக கலந்துகொள்வது, விளம்பரங்களிலும் சினிமாவிலும் நடிப்பது போன்றவற்றிலேயே தமது கூடுதலான நேரத்தை செலவிடுவர்.
ஆனால், யுக்ரைன் நாட்டில் இவ்வருட அழகுராணியாகத் தெரிவான அனா ஸயாசிக்வ்ஸ்கா அந்நாட்டு மக்களுடன் இணைந்து அரசியல் போராட்டங்களில் ஈடுபடுகிறார்.
யுக்ரேனில் ஜனாதிபதி விக்டர் யனுகோவிச் தலைமையிலான அரசாங்கத்துக்கு எதிராக நடைபெறும் பாரிய ஆர்ப்பாட்டங்களில் அனா ஸயாசிக்வ்ஸ்காவும் பங்குபற்றுகிறார்.
21 வயதான அனா ஸயாசிக்வ்ஸ்கா, கடந்த மாதம் மிஸ் யுக்ரேன் 2013 அழகுரணியாகத் தெரிவானார். கடந்த செப்டெம்பர் மாதம் இந்தோனேஷியாவில் நடைபெற்ற உலக அழகுராணி போட்டியில் யுக்ரைன் சார்பில் அவர் பங்குபற்றியமை குறிப்பிடத்தக்கது.
இதன் மூலம் யுக்ரைனில் நன்கு அறியப்பட்ட பிரபலங்களில் ஒருவரானார் அனா ஸயாசிக்வ்ஸ்கா. இந்தப் புகழை அவர் தனது சொந்த வாழ்க்கையை முன்னேற்றவதற்காக மாத்திரம் பயன்படுத்திக்கொள்ள எண்ணவில்லை.
அண்மைக்காலமாக யுக்ரைனில் அரசாங்கத்துக்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறுகின்றன. தலைநகர் கீவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்குபற்றினர். இந்த ஆர்ப்பாட்டங்களின் போது அனா ஸயாசிக்வ்ஸ்காவும் பொதுமக்களுடன் இணைந்துகொண்டார். தனது நாட்டின் எதிர்காலம் குறித்து தான் கவலை கொண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இரு நாட்களின்பின், ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு தேநீர் முதலான பானங்களை வழங்கும் தொண்டர்களுடன் அவர் இணைந்துகொண்டார். இக்கூடாரங்களில் அவர் காணப்படும் புகைப்படங்களும் வெளியாகியுள்ளன.
'வெறுமனே நின்றுகொண்டிருக்காமல் ஏதேனும் பலனுள்ள விடயங்களை செய்வதற்கு நான் தீர்மானித்தேன்' என அவர் கூறியுள்ளார்.
2013-12-26 15:10:15
அழகுராணிகளாக தெரிவுசெய்யப்படும் யுவதிகளில் பெரும்பாலானோர் பொதுவாக விழாக்களில் அதிதியாக கலந்துகொள்வது, விளம்பரங்களிலும் சினிமாவிலும் நடிப்பது போன்றவற்றிலேயே தமது கூடுதலான நேரத்தை செலவிடுவர்.
ஆனால், யுக்ரைன் நாட்டில் இவ்வருட அழகுராணியாகத் தெரிவான அனா ஸயாசிக்வ்ஸ்கா அந்நாட்டு மக்களுடன் இணைந்து அரசியல் போராட்டங்களில் ஈடுபடுகிறார்.
யுக்ரேனில் ஜனாதிபதி விக்டர் யனுகோவிச் தலைமையிலான அரசாங்கத்துக்கு எதிராக நடைபெறும் பாரிய ஆர்ப்பாட்டங்களில் அனா ஸயாசிக்வ்ஸ்காவும் பங்குபற்றுகிறார்.
இதன் மூலம் யுக்ரைனில் நன்கு அறியப்பட்ட பிரபலங்களில் ஒருவரானார் அனா ஸயாசிக்வ்ஸ்கா. இந்தப் புகழை அவர் தனது சொந்த வாழ்க்கையை முன்னேற்றவதற்காக மாத்திரம் பயன்படுத்திக்கொள்ள எண்ணவில்லை.
அண்மைக்காலமாக யுக்ரைனில் அரசாங்கத்துக்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறுகின்றன. தலைநகர் கீவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்குபற்றினர். இந்த ஆர்ப்பாட்டங்களின் போது அனா ஸயாசிக்வ்ஸ்காவும் பொதுமக்களுடன் இணைந்துகொண்டார். தனது நாட்டின் எதிர்காலம் குறித்து தான் கவலை கொண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இரு நாட்களின்பின், ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு தேநீர் முதலான பானங்களை வழங்கும் தொண்டர்களுடன் அவர் இணைந்துகொண்டார். இக்கூடாரங்களில் அவர் காணப்படும் புகைப்படங்களும் வெளியாகியுள்ளன.
'வெறுமனே நின்றுகொண்டிருக்காமல் ஏதேனும் பலனுள்ள விடயங்களை செய்வதற்கு நான் தீர்மானித்தேன்' என அவர் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment