புதையல் தோண்டிய பிரதேச சபை உறுப்பினர் உட்பட 9 பேர் கைது!
2013-12-26 10:45:51
என்.ஜே.பி.எம்
புதையல் தோண்டும் முயற்சியில் ஈடுபட்ட பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் உட்பட ஒன்பது பேர் எம்பிலிப்பிட்டிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தனமல்வில பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் உட்பட மேலும் சிலரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த செவ்வாய்க்கிழமை இரவு எம்பிலிபிட்டிய பிரதேசத்தில் வீடு ஒன்றில் இவர்கள் புதையல் தேண்டிக் கொண்டிருந்ததாகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
புதையல் தோண்ட பயன்படுத்தப்படும் உபகரணங்கள் உற்பட பூஜைப்பொருட்கள் சிலவற்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
No comments:
Post a Comment