Wednesday, 25 December 2013

நாளைய டெஸ்ட் போட்டியுடன் ஓய்வு பெறும் ஜெக்ஸ் கலீஸ்
2013-12-25 17:47:18
தென் ஆபிரிக்காவின் மூத்த வீரரும் நட்சத்திர சகலதுறைவீரருமான ஜெக்ஸ் கலீஸ் நாளை டேர்பனில் ஆரம்பமாகவுள்ள இந்திய அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியுடன் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறவுள்ளதாக அறிவித்துள்ளார்.



ஜெக் கலீஸின் ஓய்வு குறித்த தகவலை தென் ஆபிரிக்க கிரிக்கெட் சபை இன்று அதனது உத்தியோகபூர் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

தனது ஓய்வு குறித்து 38 வயதான ஜெக் கலீஸ் கூறுகையில், 'இது ஒரு இலகுவான தீர்மானமாக அமையவில்லை. ஆனால் ஓய்வுபெறுவதற்கான நேரம் இதுவென நான் உணர்கின்றேன். ஆனால் கிரிக்கெட்டில் இருந்து முழுமையாக விடைபெற நான் எதிர்பார்க்கவில்லை.

சிறப்பாக விளையாடுவதுடன் உடலும் ஒத்துழைத்தால் 2015ஆம் ஆண்டு உலகக்கிண்ணம் வரையில் தென் ஆபிரிக்காவுக்கா ஒரு நாள் போட்டிகளில் விளையாட ஆர்மாகவுள்ளேன்' எனத் தெரிவித்துள்ளார்.

1995ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமாக ஜெக்ஸ் கலீஸ் இதுவரையில் 165 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 44 சதங்களையும் 58 அரைச் சதங்கள் அடங்கலாக 13174 ஓட்டங்களைக் குவித்துள்ளார். அத்துடன் 292 விக்கெட்களையும் வீழ்த்தியுள்ளார்.

தொடர்ந்தும் மட்டுப்படுத்தப்பட்ட போட்டிகளில் விளையாடவுள்ள கலீஸ் 325 ஓரு நாள் போட்டிகளில் விளையாடி 17 சதங்களும் 86 அரைச் சதங்களும் அடங்கலாக 11574 ஓட்டங்களைக் குவித்துள்ளதுடன் 273 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.

No comments:

Post a Comment