அரசியல் கட்சிகளிடம் உத்தரவாதம் கோரும் பங்களாதேஷ் கிரிக்கெட் சபை
2013-12-26 11:03:44
கிரிக்கெட் போட்டிகளை இடையூறு இன்றி நடத்துவதுவது தொடர்பாக பங்களாதேஷின் பிரதான அரசியல் கட்சிகளிடம் அந்நாட்டு கிரிக்கெட் சபை பாதுகாப்பு உத்தரவாதம் கோருவதற்குத் தீர்மானித்துள்ளது.
இலங்கை அணியுடனான இரு தரப்பு போட்டிகளையும் ஆசியக்கிண்ணத் தொடர் மற்றும் இருபது20 உலகக்கிண்ணப் போட்டிகளையும் பங்களாதேஷ் நடத்தவுள்ளது.
ஆனால், அண்மைக்காலமாக பங்களாதேஷில் இடம்பெறும் ஆர்பபாட்டங்கள், அரசியல் வன்முறைகள் காரணமாக அங்கு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பங்குபற்றுவதில் தயக்கம் தெவிக்கப்படுகிறது.
இந்நிலையில் அரசியல் விவகாரங்கள் காரணமாக கிரிக்கெட் போட்டிகளுக்கு பாதிப்பு ஏற்படாது என உத்தரவாதம் அளிக்குமாறு பிரதான அரசியல் கட்சிகளிடம் பங்களாதேஷ் கிரிக்கெட் சபை கோரியுள்ளது.
இலங்கை, பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டிகள் ஜனவரி 27 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ன. பெப்ரவரி மாதம் ஆசிய கிண்ணப் போட்டிகள் பங்களாதேஷில் ஆரம்பமாகவுள்ளன. மார்ச் மாதம் இருபது20 உலகக்கிண்ணப் போட்டிகள் ஆரம்பமாகவுள்ளன.
ஆசிய கிரிக்கெட் பேரவை மற்றும் சர்வதேச கிரிக்கெட் பேரவையின் முக்கிய கூட்டங்கள் நடைபெறவுள்ள நிலையில் அடுத்த மாதம் முற்பகுதியில் பங்களாதேஷின் அரசியல் கட்சிகளை அந்நாட்டு கிரிக்கெட் சபைத் தலைவர் நஸ்முல் ஹசன் சந்திக்கவுள்ளார்.
பங்களாதேஷ் பிரதமரும் அவாமி லீக் கட்சியின் தலைவருமான ஷேக் ஹஸீனா மற்றும் பி.என்.பி. கட்சியின் தலைவி பேகம் காலிதா ஸியா ஆகியோரை நஸ்முல் ஹசன் சந்திப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment