தேசிய பொருளாதாரத்தை கருத்திற்கொண்டே புதிய அரங்குகள் நிர்மாணிக்கப்பட்டன : நிஷாந்த ரணதுங்க
2013-12-25 16:01:04
நாட்டின் தேசிய பொருளாதாரத்தை கருத்திற்கொண்டே ஹம்பாந்தோட்டையிலும், பல்லேகலவிலும் புதிய விளையாட்டு அரங்குகளை நிர்மாணிப்பதற்கு ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் தீர்மானித்தது என அந்நிறுவனத்தின் செயலாளர் நிஷாந்த ரணதுங்க தெரிவித்துள்ளார்.
2011 உலகக்கிண்ணப் போட்டிகளுக்காக இவ்விரு புதிய அரங்குகளை நிர்மாணிப்பதற்கும் கொழும்பில் ஆர்.பிரேமதாஸ அரங்கை நிர்மாணிப்பதற்கும் பெருமளவு பணத்தை செலவிட்ட நிலையில், ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் சுமார் 7 கோடி டொலர் கடனில் தள்ளப்பட்டுள்ளது.
இது குறித்த விமர்சனங்கள் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள நிஷாந்த ரணதுங்க, தேசிய பொருளாதாரத்தைக் கருத்திற்கொண்டே இந்த அரங்குகள் நிர்மாணிக்கப்பட்டதாகவும் ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் வருமானத்துக்காக அவை நிர்மாணிக்கப்படவில்லை. இந்த முக்கியமான விடயத்தை அரசியல்வாதிகள் இதை மறந்துவிடுகின்றனர் எனவும் கூறியுள்ளார்.
உலகக்கிண்ணப் போட்டிகளின்போது ஐ.சி.சி. இலங்கையில் 30 மில்லியன் டொலர்களை செலவிட்டது. 2012 ஆம் ஆண்டு இருபது20 உலகக்கிண்ணப் போட்டிகளின்போது மீண்டும் 35 முதல் 40 மில்லியன் டொலர்களை ஐ.சி.சி. செலவிட்டது. அதாவது பணம் நேரடியாக எமக்கு வரவில்லை. அப்பணம் ஹோட்டல்கள், பயண முகவர்கள், உணவு விநியோகஸ்தர்கள், போக்குவரத்து முகவர்கள், விமான சேவை நிறுவனங்கள் உட்பட பலருக்கு அப்பணம் சென்றது' எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment